அயன் பட பாணியில்.. எக்குத்தப்பாக சிக்கிய இளம் பெண்! டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 1.06 கிலோ எடையுள்ள ஹெராயின் என்னும் போதைப்பொருளை கடத்திவந்த உகாண்டா நாட்டுப் பெண்மணியை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

உகாண்டா நாட்டுப் பெண்

உகாண்டா நாட்டின் என்டெப்பே விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு ஷார்ஜா வழியாக வந்த பெண் ஒருவர் 1.06 கிலோ எடையுள்ள ஹெராயினை ரகசியமாக பைக்குள் மறைத்து வைத்திருந்திருக்கிறார். சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின்போது இந்த உகாண்டா பெண்மணி சந்தேகத்திற்கிடமாக நடந்துகொள்ளவே, அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச்சென்று விசாரணை செய்திருக்கிறார்கள்.

பையில என்ன?

டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அந்தப் பெண்ணை, விமான நிலைய சுங்கத்துறை  அதிகாரிகள் விசாரிக்கும் போது  அவர் படபடப்புடன் இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே, அவரது உடமைகளை பிரித்து ஆராயத் துவங்கியுள்ளனர்.

அப்போது அந்தப்  பெண்ணின் பையில் ரகசியமாக ஒரு பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 107 ஹெராயின் கேப்சூல்களை அவர் பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியிருக்கிறது. அதன் எடை  1.06 கிலோ இருந்ததாகவும் டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 கோடி மதிப்பு

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டாவில் இருந்து ஷார்ஜா வழியாக இந்தியா வந்த பெண்ணிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வெளிநாட்டிலிருந்து போதை மருந்துகளைப் போலவே சட்ட விரோதமாக தங்கத்தினை இந்தியாவிற்கு கடத்த முயற்சிக்கிறார்கள் பிரபல சீட்டிங் சேம்பியன்கள். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ராஜ்ய சபா வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் கடத்தல் தங்கம் அதிகளவில் பிடிபடும் டாப் 5 இந்திய விமான நிலையங்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை.
2. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி.
3. அண்ணா சர்வதேச விமான நிலையம், சென்னை.
4. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம்.
5. கொச்சி சர்வதேச விமான நிலையம்.

WOMAN, UGANDA, DELHI AIRPORT, INDRA GANDHI INTERNATIONAL AIRPORT, உகாண்டா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்