'ரொம்ப தூரம் வந்துட்டோம் போலையே...' அப்பப்பா... என்ன டயர்ட்...! 'ஒரு தூக்கத்தை போட்டு போவோம்...' - இன்டர்நெட்டை 'தெறிக்க' விட்ட போட்டோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் நகர பகுதியில் நடந்து திரிந்த யானைகள் குடும்பத்தோடு படுத்து உறங்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கடந்த 3ம் தேதி, தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் நகர பகுதிக்குள் கிட்டத்தட்ட 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது.

இந்த யானை கூட்டம் உணவை தேடி வந்த போது வழி தவறி நகரப்பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவை அனைத்தும், இயற்கையான சரணாலயமாக இருந்த இடத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் புறப்பட்ட இந்த யானைக் கூட்டம் 500 கி.மீ பயணித்து நகருக்குள் வந்துள்ளது.

நகருக்குள் புகுந்த யானை கூட்டம் மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல், அங்கிருக்கும் வீடுகளை சரணாலயம் போல பார்த்து சென்றது.

அதன்பின் வனத்துறையினர் யானைகள் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தும் முன்னரே அதனை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஆச்சரிய நிகழ்வு என்னவென்றால், சீனா அரசு தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்துக்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேர நேரலையாக வழங்கி வருகிறது.

இந்த சம்பவம் சீன மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்போது 15 யானைகள் வனத்துக்குள் செல்லும் வழியில் அசதியாக படுத்து உறங்கும் அழகிய காட்சி ஒன்று உலகளவில் பிரபலமாகியிருக்கிறது.

அதில் பெரிய யானைகள் படுத்து கொண்டிருக்கும் போது நடுவில் இருந்த குட்டி யானை மட்டும் தூங்காமல் சேட்டை செய்யும் காட்சி மக்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்