ஒரே 'ட்வீட்டில்' உலகம் முழுவதும் 'வைரலான பெண்'... '10 மில்லியன்' பார்வையாளர்கள்... '94.4K ரீ ட்விட்' ... "அப்படி என்ன அந்த வீடியோவில் உள்ளது?..."
முகப்பு > செய்திகள் > உலகம்புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேட்டி என்ற பெண் தனது இறுதி சிகிச்சைக்கு முன்னர் பதிவிட்ட உருக்கமான ட்விட்டர் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. வெறும் 12 ஃபாலோயர்களை மட்டுமே கொண்டிருந்த கேட்டியை தற்போது 32 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்ட கேட்டி ஹேலண்ட் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலி மிகுந்த இந்த சிகிச்சை முறையின் இரு கட்டத்தை கேட்டி ஹேலண்ட் எட்டியுள்ளார்.
இதனிடையே கேட்டி தான் இறுதி கட்ட சிகிச்சையை மேற்கொள்ளும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோவை ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில் "என்னை ட்விட்டரில் 12 நபர்கள் மட்டுமே பின் தொடர்கின்றனர் .அந்த 12 பேருக்கும் கூறுகிறேன். இன்று தான் எனது புற்றுநோயின் இறுதி கட்ட கீமோதெரபி சிகிச்சை" என பதிவிட்டு தான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து தனது வீட்டிற்கு வந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தை திறந்து பார்த்துள்ளார். அதில் தன்னுடைய பதிவு உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கடைசியாக ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் கடந்தது. 94.4K ரீ ட்விட் மற்றும் 957.1K லைக்ஸ் வாங்கி உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு ஆச்சர்யத்தில் திகைத்து போனார்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தன் மேல் கொண்டிருந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன கேட்டி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 12 பேர் மட்டுமே பின் தொடர்ந்த கேட்டியின் ட்விட்டர் கணக்கை தற்போது 32 ஆயிரம் பேர் தொடர்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவின்' தீவிரம் புரியணுமா?... 'மீம்ஸ் பாய்ஸ்' இதைப் பாருங்க ... 'கதறி அழும்' சீன பெண் மருத்துவர்... 'வைரல் வீடியோ'...
- எல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...?' 'வைரல் வீடியோ'...
- ‘செல்ல’ நாயைக் காப்பாற்றிய மருத்துவர்கள்... ‘ரூ 42 கோடி’ செலவு செய்து ‘நன்றி’ சொன்ன ‘சிஇஓ!’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் சம்பவம்...
- 'கொரோனா வைரஸிற்கு' எதிராக போராட 'துணிந்து' விட்டோம்... 'தலைமுடியை' வெட்டி கொள்ளும் 'சீன நர்ஸ்'...! 'வைரல் வீடியோ'...
- 'ஃபாஸ்ட் புட்' கடையில வேலை பார்த்தவரு போல... தீயாய் பரவும் 'நெருப்பு கட்டிங்' வீடியோ... 'சிக்கன் ரைஸ்' போடுற மாதிரியே ஒரு எபஃட்டு...
- ஆஹா! என்ன 'டேஸ்ட்டு' என்ன டேஸ்ட்டு... சீக்கிரம் 'கடிச்சிக்குடு' மேன்... செம வீடியோ!
- அந்த அபிநய 'சரஸ்வதியே' தோற்றுவிடும் பாவனை... 'கலைத்தாயின்' மூத்த வாரிசு... ட்ரெண்டான 'டிக்டாக் தமிழன்'...
- 'புற்றுநோயுடன் வேலை செய்து'... 'ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றும்'... 'சேலத்தில் ஒரு சிங்கப் பெண்!'...
- 'வாயில் பாலை ஊற்றி'... 'இந்தா வந்துட்டாங்கல'... 'அடேய் சோதிக்காதிங்கடா' கடுப்பான நெட்டிசன்கள்!
- 'எமனையே நீ ஜெயிச்சுட்டே'... 'ரீஎன்ட்ரி கொடுத்த சிறுவன்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!