கேமராவை முழுங்கிய சுறா மீன்.. ஆத்தாடி சுறாமீனுக்குள்ள இப்படித்தான் இருக்குமா.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கேமரா ஒன்றினை சுறா விழுங்க முயற்சி செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஒத்த நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு கோடியா.. மிரள வைத்த துபாய் ஏலம்..!

கேமரா

கடலில் எப்போதும் பலம்வாய்ந்த உயிரினங்களாக கருதப்படுபவை சுறா மீன்கள். இவற்றின் கோரை பற்களை கண்டு பயப்படாத ஆட்களே இருக்க முடியாது. அப்படி, கடலில் ஜாம்பவானாக திகழும் சுறா மீன்களை படம் பிடிக்க சென்ற ஒருவருக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருக்கிறது டைகர் சுறாமீன் ஒன்று.

தற்போது வைரலாக பரவிவரும் இந்த வீடியோவில், சுறா மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்துகின்றன. கீழ்ப்புறத்தில் இருந்து இதனை தத்ரூபமாக படமெடுத்துக்கொண்டிருந்த இன்ஸ்டா 360 கேமராவை ஒரு டைகர் சுறா பார்க்கிறது. இந்த கேமராவை சிறிய மீன் என கருதியதா? அல்லது எதிரியென நினைத்ததோ தெரியவில்லை. ஆனால், அந்த கேமராவை லபக் என்று விழுங்க சுறா முயற்சித்தது மட்டும் தெளிவாக விடியோவில் பதிவாகி இருக்கிறது.

டைகர் சுறா

பொதுவாக 5 மீட்டர் வரையில் வளரக்கூடிய இந்த டைகர் சுறா மீன்கள் அதிகமாக பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன. பக்கவாட்டில் இருக்கும் வரிகள் காரணமாக இந்த சுறாக்களுக்கு டைகர் எனப் பெயர் வந்திருக்கிறது. 600 கிலோ வரையில் எடை கொண்ட இந்த வகை சுறா மீன்கள் வேட்டையாடுவதில் மிகுந்த திறமை பெற்றவை. தன்னுடைய கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இவை. அப்படித்தான் அந்த கேமராவையும் பிடித்திருக்கிறது டைகர் சுறா.

வைரல் வீடியோ

ஸிமி தா கிட் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கேமராவை கவ்விய சுறா அதனை கடிக்கப் பார்க்கிறது. அதன் பின்னர் கேமராவை உள்ளே விழுங்க முயற்சித்தபோது, சுறாவின் வாய்க்குள் இருக்கும் பிரம்மாண்ட சதை மடிப்புகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவில் அவர்," என்னுடைய இன்ஸ்டா360 கேமராவை ஆர்வம் மிகுந்த சுறா ஒன்று டேஸ்ட் செய்து பார்த்தபோது எடுத்த வீடியோ" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 7.8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

சுறா மீன் ஒன்று கேமராவை கவ்விய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

TIGER SHARK, TIGER SHARK SWALLOWED 360 DEGREE CAMERA, சுறா மீன், கேமரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்