'வேற்று கிரகவாசிகளை' கண்காணிக்கும் நவீன தொலைநோக்கி... 'ரஷ்யா' உருவாக்கி சாதனை...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேற்று கிரகவாசிகள் அனுப்பும் சமிக்ஞைகளைத் தேட உதவும் நவீன தொலைநோக்கி மற்றும் கண்காணிப்பு மையத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லை அது வெறும் கற்பனையா? என்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், வானிலிருந்து ஏராளமான செய்திகள் அதிர்வெண்களாக நமக்கு வந்து கொண்டே இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இவற்றை கண்காணித்து புரிந்து கொள்ள முடியுமானால் பூமியை போல் வேறு கிரகங்கள் இருக்கின்றனவா, அவற்றில் உயிரினங்கள் இருக்கின்றனவா? என்பது குறித்து தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அதற்காக அண்ட கதிர்களை கண்காணிக்கும் மையங்கள் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய அப்சர்வேட்டரியை ரஷ்யா அமைத்துள்ளது.

இந்த தொலைநோக்கியின் முக்கிய நோக்கம் அண்ட கதிர்களை (காஸ்மிக் கதிர்கள்) கண்காணிப்பதாகும். இந்த கருவி மூலம் ஒளியின் பிரகாசமான மற்றும் குறுகிய ஒளியியல் ஃப்ளாஷ்களையும் உற்று நோக்கலாம். ரேடியோ அதிர்வெண் வரம்பைக் காட்டிலும் லேசர் சேனல் வழியாக யாராவது பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறார்களா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.  வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞைகளைத் தேடவும் இந்த கருவியைப் பயன்படுத்தலாம்.

எதிர்காலத்தில் வேற்று கிரக நாகரீகங்களைத் தேடுவது குறித்து ரஷ்யா ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். ஏலியன்கள் குறித்த கண்காணிப்பில் இந்த கருவி ஒரு முக்கிய மைல் கல் என்றே கருதப்படுகிறது.

TELESCOPE, SIGNALS, RUSSIA, MASCO, EXTRATERRESTRIALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்