மீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் புளோரிடா மாநில கடல் பகுதியில் சுமார் 158 கிலோ எடை கொண்ட அரிய வகை வார்சா மீன் சிக்கியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடல்பகுதியில் 350 பவுண்டுகள் அதாவது 158 கிலோ எடை கொண்ட இந்த வார்சா வகை மீன் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த மீன் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியதாக அமெரிக்க  மீன்  வள பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. பொதுவாக இவை 180 முதல் 1700 அடி ஆழத்தில் காணப்படும். வார்சா வகை மீன்களில், இந்த மீன்களுக்கு 10 முதுகெலும்புகள் இருக்கும். 

436 பவுண்டுகள் எடைகொண்ட வார்சா வகை மீன் இதற்கு முன்னதாக டெஸ்டின் நகர் அருகே பிடிபட்டுள்ளது. வார்சா வகை மீன்களின் ‘ஓட்டோலித்’ என்ற உறுப்பு மதிப்புமிக்கது, என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மீன் வள  ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள் இந்த மீனின் வயது 50 ஆண்டுகள் என கணித்துள்ளனர். மேலும் தங்களால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இதுவே பழமையானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

WARSAW FISH, 158 KG WEIGHT, AMERICA, FLORIDA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்