Russia – Ukraine Crisis: இந்திய மாணவர்கள் விமானத்துல ஏறினதும்.. பைலட் சொன்ன விஷயம்.. கண்கலங்கிய மாணவர்கள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மீட்பதற்கு விமானம் வருமா? சொந்த நாட்டிற்கு திரும்ப முடியுமா? மீண்டும் தாய், தந்தையை காண முடியுமா? இவை தான் உக்ரைனில் சிக்கியுள்ள பல இந்திய மாணவர்களின் மனவோட்டமாக இருக்கிறது. எப்படியாவது தங்களை காப்பாற்றும்படி இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து சமூக வலை தளங்கள் வழியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

"இதுதான் கடைசி.. இந்த முறையாவது கோர்ட்டுக்கு நேரில் வாங்க".. ஜடேஜா மனைவிக்கு கோர்ட் கொடுத்த சம்மன்..!

மீட்பு முயற்சி

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்க ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை இந்திய அரசு துவங்கி இருக்கிறது. இதன்படி, உக்ரைனுக்கு அருகில் உள்ள ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளின் மூலமாக மாணவர்களை மீட்க இந்திய அரசு முடிவு எடுத்தது.

4 அமைச்சர்கள்

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, பல்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் நான்கு இந்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவுக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிக்கு ஹர்தீப் பூரி -யும் போலந்திற்கு விகே சிங் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல, ஹங்கேரி வழியாகவும் இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து இந்திய மாணவர்களை ஏற்றிக்கொண்டு டெல்லி திரும்பி இருக்கிறது ஸ்பைஸ் ஜெட் விமானம்.

பைலட் சொன்ன விஷயம்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மாணவர்கள் ஏறியதும், அந்த விமானத்தின் பைலட் அங்குள்ள ஒலிபெருக்கி வாயிலாக பேசி இருக்கிறார். அதில்,"உங்களை மீண்டும் ஆரோக்கியத்துடன் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பயம், நிச்சயமில்லாத நிலை ஆகியவற்றை மன உறுதியுடன் கடந்து வந்திருக்கும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம். நாம் தாய்நாட்டுக்கு புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" எனக் கூறி இருக்கிறார்.

விமானி பேசி முடித்ததும் மாணவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பியதுடன் 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா ஜி ஜெய்' ஆகிய கோஷங்களை எழுப்பினர். பயமில்லாமல், கவலைகளை விடுத்து நிம்மதியாக இருக்கையில் அமரும்படி விமான பணிப்பெண்கள் மாணவர்களிடத்தில் கனிவுடன் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களை மீட்டு வந்த விமானத்தின் பைலட் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

“சாப்டுட்டு கால் பண்றேன்னு சொன்னான்.. ஆனா”.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை உருக்கம்..!

 

RUSSIA UKRAINE CRISIS, PILOT, INDIANS AMID UKRAINE EVACUATION, இந்திய மாணவர்கள், மீட்பு முயற்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்