"வைரஸை கொல்லுவிங்கன்னு பாத்தா..." "வைரஸ் பாதிச்ச ஆளையே போட்டுத் தள்ளிட்டீங்களேய்யா..." "நல்லவேளை வடகொரியாவுல பிறக்கல..."
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வடகொரியாவில் நிகழ்ந்துள்ளது.
வடகொரியாவில் நடைபெறும் சம்பவங்கள் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே இருப்பது வழக்கம். சமீபத்தில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தூங்கிய 'ரி மவுங் சூ' என்ற அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. வயதில் மூத்தவர் அசதியில் தூங்கியிருக்கலாம் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே போல் அங்கு நடைபெறும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது விதியாகும். சுப்ரீம் பீப்பிள்ஸ் அசம்ப்ளி (எஸ்பிஏ) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். இதில் ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்னவென்றால், தேர்தலில் ஒரேயொரு வேட்பாளர் மட்டும்தான் போட்டியிடுவார், அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. அது வேறு யாரும் அல்ல, கிம் ஜாங் உன் மட்டும்தான்.
இதற்கு எதற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பது அவருக்கே வெளிச்சம். இப்படி ஒரு தேர்தல் யுக்தியை பயன்படுத்தி தலைமுறை தலைமுறையாக கிம் ஜான் உன்னின் குடும்பத்தினர் வடகொரியாவை ஆட்சி செய்து வருகின்றனர்.
இதுபோல் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் வடகொரியாவில் நடைபெற்றுள்ளது.
வடகொரியாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என கருதிய அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவர் ஏதேச்சையாக பொதுக் குளியலறைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். சிறிது நேரம் கழித்து எந்த விசாரணையும் இன்றி உயர் அதிகாரிகள் உத்தரவின்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் வடகொரிய மக்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'உடம்பு' முழுவதும் 'பட்டாசை' சுற்றிக் கொண்டு... உடல் மேல் 'பெட்ரோலை' ஊற்றி... அதிகாரிகளை 'பதற' வைத்த நபர்...
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- கொரோனா என்பது ஃபேமிலி பேராம்... ஒரிஜினல் பேரை அறிவிச்சிருக்காங்க WHO... ஏன்? எதற்கு?... தகவல் உள்ளே...
- சத்தமில்லாமல் 'பிரிட்டனுக்குள்' நுழைந்த 'கொரோனா'... 'அச்சத்தில்' பிரிட்டன் மக்கள்...
- ஓடி ஒளியிற பழக்கம் எனக்குக் கிடையாது... 'பெய்ஜிங்' நகரில் நேரில் ஆய்வு செய்த சீன அதிபர்... விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த 'ஜிஜின்பிங்'
- 'வேக்சின்' கண்டுபிடிச்சாச்சு... விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்... 'இரவு பகலாக' நடைபெறும் 'சோதனை'...
- 'கொரோனாவை' வென்ற 'கேரள' மாணவி... 10 நாள் சிகிசையில் 'பூரண குணம்'... 'வைரஸ்' பீதியிலிருந்து 'விடுதலை'...
- தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...