Stealth omicron : RT-PCR சோதனையிலும் சிக்காத புதிய வகை கொரோனா.. வார்னிங் தரும் நிபுணர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்டெல்த் ஒமைக்ரான்:  RT-PCR சோதனையிலும் கண்டறிய முடியாத புதிய வகையான பிஏ.2, ஸ்டெல்த் ஒமைக்ரான் ஐரோப்பா கண்டங்களை அச்சுறுத்தி வருவதாக இங்கிலாந்து ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Stealth omicron : RT-PCR சோதனையிலும் சிக்காத புதிய வகை கொரோனா.. வார்னிங் தரும் நிபுணர்கள்
Advertising
>
Advertising

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது.  கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என பல வகைகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

A new type of stealth omicron that has not been tested in RT-PCR

இந்நிலையில் ஒமைக்ரானில் இருந்து புதிய வேரியன்ட் தோன்றி வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த ஓமைக்ரான் மாறுபாட்டின் புதிய துணை விகாரம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டெல்த்  இந்த  RT-PCR சோதனையில் இருந்தும் தப்பிக்கக்கூடியது என்று இங்கிலாந்து ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.   ஒமைக்ரான் வகையே சேர்ந்த  புதிய துணை  BA.2, 'ஸ்டெல்த் ஓமைக்ரான்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ்  ஐரோப்பா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஸ்டெல்த் ஓமைக்ரான் என்றால் என்ன? அது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விளையாடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டினாரா பாஜக அமைச்சரின் மகன்? பீகாரில் பரபரப்பு!

இதுவரை உலக அளவில் அதிகம் பரவிய ஒமைக்ரான் வைரஸ் BA.1 வகையாக இருக்கிறது. ஆனால் தற்போது, டென்மார்க் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் BA.2 வகை அதிகமாக பரவி வருகிறது. டிசம்பர் பிற்பகுதியிலிருந்து ஜனவரி நடுப்பகுதி வரையிலான இரண்டு வாரங்களில், BA.2 வகை தொற்று 20% -ல் இருந்து 45% ஆக உயர்ந்துள்ளதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் இந்த மாறுபட்ட வைரஸ் வகை வேகமாக பரவி வருவதாக டென்மார்க் அரசாங்கம் கூறியுள்ளது.

85 வயசு மைசூரு மாப்பிள்ளைக்கு.. 65 வயசுல கிடைச்ச மணமகள் (மகாராணி).. சில்லு கருப்பட்டி போல் காதல் கதை

இந்தியா

இந்தியாவிலும் பிஏ.2 வகை துணை வைரஸின் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வகை வைரஸ் குறித்து மக்களுக்கு எச்சரித்து வருகின்றனர். இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை உச்சத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதன் S மரபணு காரணமாக இது பரிசோதனையில் அதிக தவறான எதிர்மறை முடிவுகளை கொடுக்க வாய்ப்புள்ளதாக INSACOG தெரிவித்துள்ளது.

STEALTH OMICRON, RT-PCR, A NEW TYPE OF STEALTH OMICRON, ஸ்டெல்த் ஒமைக்ரான்

மற்ற செய்திகள்