கடலில் திடீர்னு தோன்றிய மர்ம தீவு.. வளர்ந்துக்கிட்டே வேற இருக்காம்.. பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்த அற்புதம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பசிபிக் பெருங்கடலில் புதிதாக தீவு ஒன்று தோன்றியுள்ளதாகவும், அது தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வினோத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது அங்குள்ள எரிமலை ஒன்று.

Advertising
>
Advertising

Also Read | ரஷ்யாவை விட்டு வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு அறிவிப்பு தான் காரணமாம்..வெளியான சாட்லைட் புகைப்படங்கள்..!

டோங்கா எரிமலை கூட்டம்

ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. இங்கே பெருமளவில் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல எரிமலைகள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் சில அடிக்கடி வெடித்து, கரும்புகையை வெளியிடும். இந்த தீவுக்கூட்டத்தில் சில நீருக்கடியில் மூழ்கியிருக்கும் எரிமலையும் அடக்கம். அப்படி கடந்த 10 ஆம் தேதி கடலுக்கடியே எரிமலை ஒன்று வெடித்திருக்கிறது. நாசா புவி கண்காணிப்பகத்தின் அறிக்கையின்படி இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது.

வளரும் தீவு

எரிமலை வெடிக்கத் தொடங்கிய பதினொரு மணி நேரத்திற்குப் பிறகு, நீரின் மேற்பரப்பிற்கு மேலே ஒரு புதிய தீவு தோன்றியது என்று நாசா அறிவித்திருக்கிறது. மேலும் இந்த புதிய தீவின் புகைப்படங்களையும் செயற்கை கோள்கள் வாயிலாக எடுத்துள்ளது. செப்டம்பர் 14 அன்று, டோங்கா புவியியல் சேவைகளின் ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவு வெறும் 4,000 சதுர மீட்டர் (சுமார் ஒரு ஏக்கர்) பரப்பளவில் இருப்பதாக மதிப்பிட்டிருந்தனர். ஆனால் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள், தீவு 24,000 சதுர மீட்டர் அல்லது 6 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புதிய தீவு

மத்திய டோங்கா தீவுகளில் உள்ள ஹோம் ரீஃப் கடற்பகுதியில் புதிய தீவு அமைந்துள்ளது. எரிமலை சீற்றத்தால் உருவாக்கப்பட்ட இந்த தீவு பெரும்பாலும் குறுகிய காலமே இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில நேரங்களில் இப்படியான இடைக்கால தீவுகள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களாக நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோங்கா புவியியல் சேவைகளின் பேஸ்புக் பதிவில், ஹோம் ரீஃப் எரிமலை வெள்ளிக்கிழமை சீற்றமாக காணப்பட்டது. ஆனால் எரிமலையின் செயல்பாடு, மத்திய டோங்காவில் குறைவான ஆபத்துக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"கடந்த 24 மணி நேரங்களில் எரிமலை சாம்பலை வெளியிடவில்லை. இருப்பினும் கடலுக்கு செல்பவர்கள் எரிமலையில் இருந்து 4 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also Read | "இத வச்சு நான் என்ன பண்றது"..? ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாவம்யா மனுஷன்..!

ISLAND, SOUTHWEST PACIFIC OCEAN, NEW ISLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்