மூணு மாசமா யாருக்கும் தெரியாம எப்படி...? 'எனக்கு பயங்கர ஷாக்கா இருக்கு...' 'பதறிய நீதிபதி...' - விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 36 வயதான ஆதித்யா சிங் என்பவர் விருந்தோம்பலில் முதுகலைப் பட்டம் பெற்று வேலையில்லாமல் லாஸ் ஏஞ்சல்ஜ்ஸ், ஆரஞ்சில் நண்பர்களின் அறைகளில் தங்கி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19 - ம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் இருந்து சிகாகோவில் உள்ள ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது கொரோனா தாக்கம் அதிகப்படியாக இருந்ததால் விமானத்தில் பயணம் மேற்கொண்டால் கொரொனா நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்துவிடுவோமோ எனும் பயத்தில் விமான நிலையத்தில் யாருக்கும் தெரியாமல் விமானநிலையத்திலேயே தங்கியுள்ளார்.
மேலும் ஆதித்யா சிங், செயல்பாட்டு மேலாளர் (operations manager) அட்டையைத் திருடி, அங்கிருபவர்கள் கேட்கும் போது அடையாள அட்டையைக் காட்டி தப்பியுள்ளார். விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் உண்ணும் உணவைத் தின்று உயிர் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் இருவர் ஆதித்யா சிங்கின் செயல்பாடு மீது சந்தேகம் அடைந்து அவரை அழைத்து விசாரித்த போது கையும் களவுமாக மாட்டியுள்ளார்.
மேலும் விமான நிலைய ஊழியர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் ஆதித்யா சிங், விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசமான குற்றங்கள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிறகு, ஆதித்யா சிங் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் விமான நிலையத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 'இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாக உள்ளது. போலி அடையாள அட்டையுடன் விமான நிலையத்துக்குள் ஒருவர் தங்கியது விமான நிலையத்துக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாகக் கருதுகிறேன்' எனக் கூறிய நீதிபதி ஆதித்யா சிங் ஜாமீன் பெறுவதற்கு 1000 அமெரிக்க டாலர்கள் பிணையத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!.. அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு தகவல்!!
- ‘இது என்னடா புது சோதனை’!.. ‘ஐஸ்கிரீம்’ கம்பெனிக்கு சீல்.. மறுபடியும் பரபரப்பை கிளப்பிய சீனா..!
- VIDEO: பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நானும் ‘தடுப்பூசி’ போட்டுக்கிறேன்.. சீரம் ‘சிஇஓ’ அசத்தல்..!
- 'தொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்'... 'நானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'... முதல்வர் அதிரடி!
- 'அடிச்சாரு பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்'... 'பதவி ஏற்றதும் செய்யப்போகும் முதல் வேலை'... உற்சாகத்தில் அமெரிக்கர்கள்!
- தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி!.. பின்விளைவுகள் வருமா?.. தடுப்பூசி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- 'இதுக்கு மேல ஒரு நொடி கூட பொறுக்க முடியாது!' - அவசர அவசரமாக மலேசிய அரசு எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- 'இனிமேல் வாரத்தின் 6 நாட்கள் ஸ்கூல் இருக்கு'... பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!