ஏர்போர்ட்ல வச்சு 'சத்தமா' சொன்ன 'ஒரு வார்த்தை'... 'அத' கேட்டப்போ 'ஒரு நிமிஷம்' எல்லாரும் அப்படியே ஆடி போயிட்டாங்க...! - விட்டா போதும் என தெறித்து ஓடிய பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது செய்த காரியம் விமான நிலையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் ரொறன்ரோ பகுதியில் வசிப்பவர் Wegal Rosen (73). இவர் கனடா நாட்டிற்கு செல்வதற்காக ஃபோர்ட் லாடர்டேல் என்ற விமான நிலையத்தில் மற்ற பயணிகளுடன் வரிசையில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று தான் வைத்திருக்கும் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சத்தம் போட்டு கூறியிருக்கிறார். இதைக் கேட்ட மக்கள் பதறியடித்து தெறித்து ஓடினர். இதன்காரணமாக போலீசார் உடனே வந்து குவிந்தனர்.

விமான நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றினர். விமான நிலையத்திற்கு வரும் போக்குவரத்திற்கும் தற்காலிக தடை போடப்பட்டது. அந்த நேரத்தில் உள்ள எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அதனைத் தொடர்ந்து செல்ல இருந்த 50 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது.

இதன்பின்னர், அவரை கைது செய்து, பாதுகாப்பாக அந்த பையை சோதனை செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. CPAP எனும் மருத்துவ உபகரணம் இருந்தது. அதாவது Wegal Rosen-க்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்சனை இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை பெறவே பையில் அந்த கருவியை வைத்திருந்துள்ளார்.

அவர் பயணத்திற்கு கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சோதனையிட அதிக தொகை செலாவகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், கனடாவிற்கு இதய நோய் நிபுணரை சந்திப்பதற்காக செல்லவிருந்தநிலையில் எனவே அதற்கு காலதாமதம் ஏற்படவே , கடுப்பான Rosen பொறுக்க முடியாமல் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

அவர் கூறிய ஒற்றை வார்த்தையால் விமான நிலையமே செயலிழந்து போனது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 15 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 10,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். ஆயினும் நீதிபதி, 20,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்தக் கூறி ஜாமீனில் விடுவித்தார்.

மேலும், இனிமேல் அவர் மீண்டும் அந்த விமான நிலையத்தில் ரொரன்றோ செல்ல முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்