பதாகையில் எழுதியிருந்த வாசகம்... தனி ஆளா முச்சந்தியில் வந்து நின்ற நபர், குவிந்த பொதுமக்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கை: இலங்கையின் மணிக்கோபுர சந்திப்பில் போராட்டத்தில் குதித்த நபரின் கையில் வைத்திருந்த பதாகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். யாருடா இது ஒரு நபர் மட்டும் இப்படி போராட்டத்தில் இறங்கியுள்ளார் என அப்பகுதி மக்கள் முதலில் கடந்து சென்றனர். பின்னர் அவரின் முகத்தை ஒரு பதாகை கொண்டு மறைத்து விட்டு நின்றதால் அனைவரின் கவனமும் அவர் மேல் குவிய தொடங்கியது.
தனியாக போராட்டம்:
யார் இவர்? எதற்காக இவ்வாறு போராட்டம் நடத்துகிறார் என்பது அனைவரின் கேள்வியாக மாறியது. இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கை நாட்டின் மொத்த கடனை அடைக்க தயாராக உள்ளதாகவும். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா எனவும் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறார். எத்தனையோ பொது பிரச்சனைகளுக்காக நிறைய போராட்டங்கள் நடக்கும். அந்த மாதிரியான போராட்டம் அல்லாமல் ஒரு நபர் மட்டும் வித்தியாசமான முறையில் போராடியது அனைவரிடையும் ஆச்சரியத்தை உண்டாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
கையில் இருந்த வாசகம்:
மேலும், எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட அட்டையையும் ஏந்தியிருந்தார்.
போக்குவரத்து நெரிசல்:
இதனால் அந்த பகுதில் மக்கள் கூட தொடங்கினர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் உருவானது. உடனடியாக காவல் துறைக்கும் தகவல் சென்றது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு கூறினார்கள். முதலில் அவர் தான் யாருக்கும் இடையூறு செய்யவில்லை என்று கூறினாலும் மக்கள் கூடுகிறார்கள் அதனால் வண்டி நெரிசல் ஏற்படுகிறது. எனவே போராட்டத்தை கலைத்து விடுமாறு வலியுறுத்தியுள்ளனர், உடனடியாக அவர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கும் அவரது போராட்டம் மக்களால் கவனிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வானத்தில் பறந்த 'இளைஞர்'.. பட்டம் விட போய் சிக்கிக் கொண்டதால் 'பரபரப்பு'..
- நான் ஒண்ணும் 'குபேரனுக்கு' சொந்தக்காரன் இல்ல...! - 'கடன்' பிரச்சனையை தவிர்க்க 'கடைக்காரர்' வச்ச போர்டு...!
- 'இது ஒண்ணும் சாதாரண கல் கிடையாது...' '310 கிலோ எடையுள்ள ஆசியாவின் ராணி...' - 'வியக்க' வைக்கும் தகவல்...!
- 'விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு குட்நியூஸ்...' தமிழக அரசு 'சூப்பர்' அரசாணை...!
- மகளிர் லோன்...! 'கூட்டுறவு வங்கியில் வாங்கியவர்களுக்கு இனிப்பான செய்தி...' - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!
- என் மேல 'கடன்' இருக்குனு தெரிஞ்ச உடனே 'ஷாக்'கா இருந்துச்சு...! வெள்ளையறிக்கை வெளியானதை அடுத்து... முதல்நபராக செய்த 'வியக்க' வைக்கும் காரியம்...!
- கொஞ்சம் சீக்கிரமா வந்து இது 'என்ன'னு பாருங்க...! 'கிணறு தோண்டினப்போ கிடைச்சிருக்கு...' சர்வதேச சந்தையில 'இதோட' மதிப்பு 745 கோடி...!
- 'பிரபல' ஐடி நிறுவனங்கள் வெளியிட்ட 'வேற லெவல்' அறிவிப்பு...! மனசே குளிர்ந்து போச்சு...! - உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள்...!
- 'ஒரு நிமிஷத்துல கடன்.. ஆன்லைன்லயே பெறலாம்!' - ஆசை காட்டி பின்னால் ஆப்பு வைக்கும் 1,509 ஆப்ஸ்! ‘ரிசர்வ் வங்கியிடம் குவிந்த புகார்கள்!’.. பாயும் நடவடிக்கை!
- “என் அம்மா ஈழத் தமிழர்தான்.. இளவயது முத்தையாவாக நடிக்க மறுத்தேன்.. காரணம் இதுதான்!” - ‘அசுரன்’ பட ‘இளம்’ நடிகர் ‘பரபரப்பு’ தகவல்!