இரவு பகலாக தொடர்ந்து 12 நாட்கள் வட்டமடித்த செம்மறி ஆடுகள்..! ஷிப்ட் மாத்தி ரெஸ்ட் வேற.. ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிகவும் விசித்திரமான ஒரு செய்தி தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Mongolia : இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வட சீனாவில் இனெர் மங்கோலியா என ஒரு பகுதி உள்ளது. இங்கே உள்ள போடௌ பகுதியைச் சேர்ந்தவர் மியோ. இவரது பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதில் ஒவ்வொரு தொழுவத்திலும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளும் இருக்கின்றன. அப்படி ஒரு சூழலில் தான் இதில் பதிமூன்றாவது தொழுவத்தில் உள்ள ஆடுகள் திடீரென கடிகாரம் சுழல்வது போல சுழலும் திசையில் வட்டமாக நடக்க ஆரம்பித்துள்ளன. முதலில் சில ஆடுகள் மட்டுமே நடக்கத் தொடங்கியதாகவும் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளுடன் இணைந்து நடக்க தொடங்கியதாகவும் தெரிகிறது,

அதுவும் கொஞ்ச நேரம் மட்டும் இந்த சம்பவம் நீடிக்காமல் தொடர்ந்து 12 நாட்கள் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் ஒரே சீராக இரவு பகல் பாராமல் வட்டமடித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல சில செம்மறி ஆடுகள் நடுவில் நடுவில் ஓய்வெடுக்க மற்ற ஆடுகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கும் என்றும் பின்னர் ஓய்வெடுத்துக் கொள்ளும் செம்மறி ஆடுகள் வட்டத்தில் இணைந்து நடந்து கொண்டிருக்கும்போது பிற செம்மறி ஆடுகள் ஓய்வெடுக்கும் என்றும் தகவல்கள் சொல்லப்படுகிறது.

இப்படி மாவே மாறி ஓய்வெடுத்துக் கொண்டே இருந்தாலும் தொடர்ந்து இந்த செம்மறி ஆடுகள் 12 நாட்களாக இந்த சுழற்சி நடையை மட்டும் கைவிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் பரவி வருகின்றன. இது ஒரு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பலரையும் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள நிலையில், லிஸ்டீரியோசிஸ் எனப்படும் நோய் இங்கு உள்ள செம்மறி ஆட்டிற்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றது.

இந்த நோயானது ஒரு பக்கம் மூளையை வீக்கம் அடையச் செய்து இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ளச் செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அதன் காரணமாக இந்த செம்மறி ஆடுகள் இப்படி நடந்து கொண்டே இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அதே வேளையில் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த ஒரு முடிவுக்கு எட்ட முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதே போல கடந்த ஆண்டு கிழக்கு சசெக்ஸில் உள்ள செம்மறி ஆடுகள் வட்ட வடிவில் நின்றதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

MIRACLE, CHINA, MONGOLIA ., SHEEP, VIDEO, VIRAL VIDEO, TRENDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்