கொரோனாவ விட இதுதான் ரொம்ப 'கொடுமையா' இருக்கு... '700 பேர் உயிரிழப்பு'... 100 பேருக்கு 'பார்வை' பறிபோனது!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் காரணமாக ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொடிய வைரஸ் மூலம் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் மூலம் ஈரான் நாட்டில் இதுவரை சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ள பொருளாதார தடைகளால் அதிர்ந்து போயுள்ள ஈரான் அரசு, மறுபக்கம் கொரோனாவின் பிடியில் திணறி வருகிறது.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது, சாராயம் குடித்தால் வைரஸில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என்ற வதந்தி பரவிய நிலையில் அதனை நம்பி பலர் சாராயம் குடிக்க ஆரம்பித்தனர். மேலும் சிலர் 'மெத்தனால்' என்ற வேதிப்பொருள் கலந்த சாராயத்தை குடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் ஈரானில் தீவிரமடைந்த போது விஷ சாராயம் குடித்து முப்பது பேர் உயிரிழந்தனர். வதந்தியை உண்மை என்று நம்பி விஷ சாராயம் குடித்து இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் விஷ சாராயம் குடித்து சுமார் நூறு பேருக்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளதாகவும், 5,500 பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துளிர்த்த நம்பிக்கை'... 'சென்னை மக்களுக்கு பாசிட்டிவ் செய்தி'... கொரோனா தொற்றில்லா இடமாக மாறிய மண்டலம்!
- அறிவுரை வழங்கிய முதலமைச்சர்!.. அணிவகுத்து நின்ற தூய்மை பணியாளர்கள்!.. என்ன காரணம்?
- "தமிழகத்தன் 6 மாநகராட்சிகளில் மீண்டும் பழைய ஊரடங்கு!"... "இன்று ஒருநாள் மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் இருக்கும்!.. குவியும் மக்கள்!
- 'சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு கொரோனா'... 'ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு'... கடைக்கு போனவங்க லிஸ்ட் எடுக்கும் பணி தீவிரம்!
- 'கிரேட் எஸ்கேப் பார்ட் 2...' 'போலீசாருக்கு' 'டிமிக்கி' கொடுத்து 'மாயமான மாயாண்டி...' 'கை கொடுத்த கொரோனா...'
- நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு.. சந்தோஷமாக அறிவித்த அதிகாரிகள்..!
- ''கொரோனா என்பது சிறிய காய்ச்சல் தான்...'' ''இதற்காக ஊரடங்கு தேவையில்லை...'' 'அதிபரின் அறியாமையால் பலி கொடுக்கும் நாடு...'
- 'காற்றில் உலவும் கொரோன மூலக்கூறு...' 'அவைதான் கொரோனா வேகமாக பரவ காரணமா?...' 'பீதியை கிளப்பும் சீன விஞ்ஞானிகள்...'
- இது இந்தியாவுக்கு கெடைச்ச 'சாதக வரம்'... 'கண்டிப்பா' நாம இதை செய்யணும்... சீனாவுக்கு 'ஆப்பு' வைக்க செம ஸ்கெட்ச்?
- 'அந்த' சிகிச்சையை பயன்படுத்தாதீங்க... 'சட்ட' விரோதமான செயல்: மத்திய அரசு எச்சரிக்கை