'நிலவின் தெள்ளத் தெளிவான புகைப்படம்...' 'அமெரிக்க புகைப்படக் கலைஞர் சாதனை...' 'துல்லிய' புகைப்படம் என அங்கீகரித்த 'நாசா...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞர் ஒருவர் பூமியிலிருந்து தெள்ளத் தெளிவாக நிலவை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அமெரிக்காவின் நாசா விண்வெளிய ஆய்வு நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் புகைப்படக்கலைஞரான ஆன்ட்ரூ மெக்காத்தி என்பவர் நிலவைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

நிலவின் பக்கவாட்டுப் பகுதியை பலரும் புகைப்படம் எடுத்திருந்த நிலையில், அதன் மேல்புறத்தை படம் பிடிப்பதில் ஆன்ட்ரூ முயற்சி மேற்கொண்டார்.

இறுதியில் ஆயிரத்து 600 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட லென்சின் உதவியுடன் முழு நிலவையும் துல்லியமாக படம் பிடித்துள்ளார். அந்தப் படத்தில் நிலவில் உள்ள மேடு பள்ளங்கள், சமவெளிப் பகுதிகள் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக தெரிகின்றன. இந்தப் படமே உலகிலேயே முதன் முதலில் பூமியிலிருந்து நிலவை மிகவும் தெளிவாக எடுத்த படம் என்று நாசா தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்