'இங்க பனிப்பொழிவு அதிகமா இருக்கு' ... சீனாவின் தற்போதைய நிலை என்ன? ... தமிழில் விளக்கும் சீன பெண்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவின் தற்போதைய நிலைமை எப்படியுள்ளது என்பது குறித்து அங்குள்ள பெண் ஒருவர் தமிழில் விளக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சீன நாட்டின் வுஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சீனா இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்காக திறக்கப்பட்ட 16 தற்காலிக மருத்துவமனைகளும் மூடப்பட்டன. சீனாவின் தற்போதைய நிலை குறித்து சீனாவில் உள்ள பெண் ஒருவர் தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், 'பெய்ஜிங் பகுதியில் தற்போது பனிப்பொழிவு இருந்து வருகிறது. பேருந்துகள் வழக்கம் போல இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பொது வெளிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருக்கிறது. வெளியில் வரும் மக்கள் கையுறை மற்றும் முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியில் வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், 'சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் கவலைப்பட்டது. ஆனால் கவலைப்படும் அளவுக்கு இங்கு உணவு பற்றாக்குறை இல்லை. கடையில் ஒரு பலகை வைத்து சில மீட்டர் இடைவெளியில் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றது. சீனா அரசும், மக்களும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எங்கள் நாடு நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய அனைத்து நாட்டிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...
- 'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா? ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்'? ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்!
- ‘அப்பவே அவரு சொன்னதை கேட்டிருந்தால்’... ‘கொரோனா குறித்து எச்சரித்த இளம் மருத்துவரிடம்’... ‘இறுதியாக சீன அரசு எடுத்த முடிவு’!
- 'வர்ற ஞாயிற்றுக்கிழமை அலார்ட்டா இருங்க' ... 'பஸ்ல இருந்து எறங்குனதும் இத பண்ணுங்க' ... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் லைக்ஸ்களை அள்ளும் ஊராட்சி தலைவர்!
- "வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை...." "என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது..." 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...
- 'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...
- 'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா? (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா?'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்!
- மூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்!
- இந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...