'பல பேருக்கு வாழ்நாள் கனவு...' 6 வயதில் 'சொந்தமா' வீடு வாங்கிய சிறுமி...! - கொண்டாடும் உறவினர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி தன் சகோதரர்களுடன் சேர்ந்து சொந்த வீடு வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முக்கிய சிட்டியான மெல்போர்னின் காலி நிலங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பு வியத்தகு முறையில் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தான் ரூபி என்ற 6 வயது சிறுமி தான் சேமித்து வைத்திருந்த பாக்கெட் மணியை கொண்டு ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார்.
இந்த சிறுமியின் தந்தை பெயர் மெக்லெலன். 37 வயதான இவர் பெரிய நிலங்களை விற்கும் டீலர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரூபி, கஸ் மற்றும் லூசி மெக்லெலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மெக்லெலன் தன் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்துள்ளார். சேமிப்பதோடு மட்டுமல்லாமல் சாமர்த்தியமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் தனது சிறு குழந்தைகளுக்கு கற்று கொடுத்தார்.
ப்ராப்பர்ட்டி டீலரான கேம் மெக்லெலன் தனது குழந்தைகள் மூவரையும் வீட்டு வேலைகளை செய்து சம்பாதிக்கும் பழக்கத்தை கற்று கொடுத்துள்ளார். மூன்று குழந்தைகளும் தங்கள் வீட்டில் செய்த வேலைகளால் கிடைத்த பாக்கெட் மணி மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாய் என்பது அனைவரின் வாயையும் பிளக்க வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளின் இந்த பணத்தை வைத்து கொண்டும், தேவைப்பட்ட மீதிப் பணத்தை கேம் மெக்லெலன் போட்டு தனது 3 பிள்ளைகளின் பெயரில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் தற்போது வாங்கி இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு அடுத்த இரண்டு மடங்கு ஆகும் என்று அவர் நம்புகிறார்.
தந்தையின் உதவியுடன் 6 வயதான ரூபி, அவரது சகோதரர் கஸ் மற்றும் சகோதரி லூசி மெக்லெலன் ஆகியோர் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள Clyde-ல் தங்கள் சொந்த வீட்டை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ப்ராப்பர்ட்டியின் மொத்த விலை ரூ. 6,71,000 ஆஸ்திரேலியன் டாலர் (ரூ.3.6 கோடி) ஆகும். குழந்தைகள் மூவரும் நிதி ரீதியாக 2000 ஆஸ்திரேலியன் டாலர் பங்களித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாமரத்த' வெட்டாம இங்க 'வீடு' கட்ட சாத்தியமே இல்லையே...! 'அப்படியா சொல்றீங்க...' - அனைவர் 'வாயையும்' அடைக்க வைத்த நபர்...!
- ஒரே ஒரு 'ஹேர்பின்' வச்சு சொந்தமா ஒரு 'வீட்டையே' வாங்கிட்டாங்க...! - சாதித்துக் காட்டிய 'டிக்டாக்' பெண்...!
- இப்படி மொத்த வீடும் 'சாம்பல்' ஆகும்னு தெரியாம போச்சே...! 'அத' விரட்டுறதுக்கு தானே 'தீ' பத்த வச்சேன்...! - கதறும் வீட்டு ஓனர்...!
- திடீரென வீட்டு ஹாலில் 'டைல்ஸ்' உடையுற சத்தம்...! 'சிமெண்ட் வச்சு அடைக்குறதுக்குள்ள...' - கண்ணீர் வடிக்கும் வீட்டு உரிமையாளர்...!
- 'டெலிவரி ஆன உணவுடன் இருந்த துண்டு பேப்பர்...' - 'அத' படிச்சிட்டு 'ரிவியூ'ல என்ன எழுதினாரு தெரியுமா...?
- இந்த கல்ல அறுத்தப்போ 'வெள்ளி மழை' மாதிரி பெஞ்சுது...! '6 வருஷமா வீட்டுக்குள்ள மறைச்சு வச்சிருந்த கல்...' - 'உண்மை' தெரிஞ்சு அதிர்ந்து போன நபர்...!
- ‘இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே’.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஆஸ்திரேலியா..!
- ஓவர்நைட்ல 'மில்லினியர்' ஆன பெண்...! அவங்க பண்ணினது 'வெரி சிம்பிள்' விஷயம்...! - அதிர்ஷ்டம் 'இப்படி' கூடவா ஒருத்தர 'கோடீஸ்வரர்' ஆக்கும்...!
- 'கோவாக்சின்' போட்டவங்க 'எங்க நாட்டுக்கு' வர்றதுல எந்த தடையும் இல்ல...! 'கோரன்டைனும் பண்ண மாட்டோம்...' - 'அதிரடி'யாக அறிவித்த நாடு...!
- திடீரென 'சீல்' வைக்கப்பட்ட மன்சூர் அலிகான் வீடு...! 'என்ன' காரணம்...? - சென்னை 'மாநகராட்சி' அதிரடி நடவடிக்கை...!