'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்மனைவியை கொன்றது மட்டுமின்றி அவரது தோலையும் கணவன் தனியாக உரித்தெடுத்த சம்பவம் தீராத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த எரிக் பிரான்ஸிஸ்கோ ரோப்லெடோ(46), இவருக்கும் இவரது 25 வயதுடைய 2-வது மனைவி இங்கிரிட் எஸ்கமில்லாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று இதேபோல சண்டை ஏற்பட ஆத்திரத்தில் எரிக் கத்தியை எடுத்து மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னரும் ஆத்திரம் தீராத அவர் மனைவியின் தோலை தனியாக உரித்து எடுத்திருக்கிறார்.
தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தனியாக வெட்டி எடுத்து அருகில் இருந்த ஏரியில் கொண்டு வீசியிருக்கிறார். இதை தன்னுடைய முதல் மனைவிக்கும் அவர் போன் போட்டு விலாவரியாக சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அவரது முதல் மனைவி போலீசுக்கு கால் பண்ணி இதை, விரைந்து சென்ற போலீசார் மிச்சமிருந்த உடல் பாகங்களை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.
இதில் கொடுமை என்னெவென்றால் தோல் உரிக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளில் பயன்படுத்தி இருக்கின்றன. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அந்நாட்டு மக்களும் இதைப்பார்த்து கொதிப்படைந்து இருக்கின்றனர். எரிக்குக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் எஸ்கமில்லாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் உயிருடன் இருக்கும் எஸ்கமில்லாவின் அழகான புகைப்படங்களையும், அழகான இயற்கை காட்சிகளையும் பதிவிட்டு ஊடகங்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லவ்வர்ஸ' தாக்குறது... அவங்களுக்கு 'கல்யாணம்' பண்ணி வைக்குறதெல்லாம் வச்சுக்காதீங்க... மீறி செஞ்சீங்கன்னா? அவ்ளோதான்... கடும் எச்சரிக்கை!
- வீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்!
- 'சந்தோஷமா இருந்த குடும்பம்'... '3 குழந்தைகள் உள்பட தம்பதிக்கு'... 'இளைஞரால் நடந்தேறிய கொடூரம்'... 'திகைப்பூட்டிய சம்பவம்'!
- அவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்!
- 'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு!
- ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...
- கோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..!’.. வெளியான பகீர் தகவல்..!
- ‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்ஷனில் இறங்கும் காவல்துறை!
- ‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!