Flight record ஐ உடைச்சு.‌ 19 வயசுல உலகத்தையே மூக்கில் மேல் விரல் வைக்க வைச்சிருக்கு.. இந்த பொண்ணு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்குகின்றனர். அந்தவகையில் ஆண்கள் மட்டுமே செய்யப்படும் சாதனை என குறிப்பிட்டதை பெண்கள்  தங்களது திறமையால் அதனை தன்வசப்படுத்தியுள்ளனர். சிறு சைக்கிளில் இருந்து விமானம் வரை எங்களுக்கு அத்துப்படி என்று மற்றவரை வாய்பிளக்க வைக்கின்றனர்.

Advertising
>
Advertising

19 வயதில் பப்ஜி, டிக் டாக் மோகத்திற்குள் சிக்கி தவிக்காமல் உலகை சுற்றி வர ஆசைப்பட்டு தனது ஆசையை சாதனையாக மாற்றியுள்ளார் பெல்ஜியத்தை சேர்ந்த பெண்.  ஸாரா ரூதர்ஃபோர்ட் (Zara Rutherford) என்ற 19 வயது பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குட்டி விமானம் மூலம் பயணத்தை தொடங்கினார். அவர் சுமார் 150 நாட்களில், சுமார் 52 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பூமியை சுற்றி வந்துள்ளார்.

41நாடுகள் வழியாக உலகை  சுற்றிவந்த ஸாரா ரூதர்ஃபோர்ட் ஜெர்மனி நாட்டில் தரையிறங்கி சாதனை படைத்தார். கோர்ட்ரிஜிக், விவெல்ஜெம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், இந்த சாதனை மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம்பெண்களை ஊக்குவிக்க முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை கோவை வந்தபோது தனக்கு நிதியுதவி அளித்தவரை சந்தித்து நன்றி தெரிவித்து சென்றார் சாரா. எதிர்காலத்தில் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் ஜாரா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று  பயணத்தை மீண்டும் செய்ய விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,  'நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். அற்புதமான தருணங்கள் உள்ளன, ஆனால் என் உயிருக்கு ஆபத்து தரக்கூடிய பயணமாக இருந்தது. பலத்த காற்று, வானிலை மாற்றம்  மழை என நான் எதிர்பார்த்ததை நல்ல அனுபவமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னா் கடந்த 2017-ம் ஆண்டு 30 வயதில் உலகை வலம் வந்த ஷாயெஸ்டா வாய்ஸ் என்ற அமெரிக்கப் பெண்தான் இந்த சாதனைக்குரியவராக இருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த பெண் விமானி டிரேசி சர்டிஸ் - டெய்லர் 53 வயதில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்திருந்தார். பிரிட்டனைச் சோ்ந்த டிராவிஸ் லுட்லோ என்ற 18 வயது இளைஞா் உலகை வலம் வந்த மிக இளம் வயது நபா் என்ற சாதனையை கடந்த ஆண்டு நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு வித்தியாசமான அனுபவத்தை தரலாம்.   பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜூல் வெர்னஸ் எழுதிய, '80 நாட்களில் உலகம் சுற்றும் பயணம்' என்ற புத்தகத்தால் கவரப்பட்ட மார்க் என்பவர்  80 நாட்களுக்குள் சைக்கிளில் உலகத்தை சுற்றும் தனது பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார்.

19 YEAR OLD, BELGIUM, ZARA RUTHERFORD, FLIGHT TRAVEL, WORLD RECORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்