‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் நிலையில், 104 வயதான இரண்டாம் உலகப்போர் முன்னாள் ராணுவ வீரர், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ள சம்பவம் உலக கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ் (104). இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 5-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியானது.
இதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலையில் சில நேரங்களில் தொய்வும், சில நேரங்களில் முன்னேற்றமும் என மாறி மாறி வந்த நிலையில் இறுதியாக ஏப்ரல் 1ம் தேதி அவரின் 104-வது பிறந்த நாளுக்கு முன்னதாக அவர் கொரோனாவை வீழ்த்தி குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாது கேக், தனக்கு பிடித்தமான பீஸா என தனது பிறந்த நாளையும் உற்சாகமாக கொண்டாடிதுடன், நான் வென்று விட்டேன் என்றார் வில்லியம்.
ஏப்ரல் 1 1916-ம் ஆண்டு ஓர்கான் மாகாணத்தில் பிறந்த வில்லியம்-க்கு, 1939-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கு இரண்டு மகள்களும், 6 பேரப்பிள்ளைகளும், 14 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தள்ளாத வயதிலும் மனோதிடத்துடன் கொரோனாவிலிருந்து மீண்ட, வில்லியம் போன்ற மூத்தவர்கள் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தின் நடுவே இருக்கும் பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’!
- மூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே!
- கொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..!
- 'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை!?'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா!... இதயத்தை நொறுக்கும் சோகம்!
- ‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’!
- சென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது?.. எங்கே அதிகம்? இடங்களின் பட்டியல் வெளியீடு..!
- ‘ரெட்டைக் குழந்தைகளுக்கு‘ வைக்கப்பட்ட ‘செம்ம டைமிங்’ பெயர்கள்.. ‘தரமான’ சம்பவம்!
- 'ஐரோப்பாவில் இருந்து வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!'... பலியானவர்களில் 95 சதவீதம் பேர் இவர்களா?... உலக சுகாதார அமைப்பு பரபரப்பு தகவல்!
- மேலும் '102 பேருக்கு' பாதிப்பு... 'தமிழகத்தில்' கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்... 'மொத்த' எண்ணிக்கை இதுதான்!
- ‘கொரோனா சிகிச்சை வார்டில்’... ‘அறிமுகம் செய்யப்பட்ட ரோபோக்கள்’... ‘பெயர் உள்பட வெளியான தகவல்’!