99 வயசு பாட்டியின் வினோத ஆசை.. கோடி-ல ஒருத்தருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.. உருக வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய நீண்ட கால ஆசையை நிறைவேற்றியுள்ளார். சொல்லப்போனால் அவரது பெரிய குடும்பம் அதனை நிறைவேற்றியிருக்கிறது.
கூட்டு குடும்பங்கள் உலகின் மிக அரிதான விஷயமாகிவிட்டது. மேலும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்று வளர்ப்பதே சிரமமான காரியம் என நினைக்கும் தலைமுறையில் பலரையும் திகைக்க வைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த மார்குரைட் கொல்லர். இவருக்கு தற்போது 99 வயதாகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இவர் தனது 100 வது கொள்ளு பேத்தியின் பிறப்பை அருகில் இருந்து பார்த்திருக்கிறார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
காதல்
தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என நினைத்திருக்கிறார் கொல்லர். ஆனால், அவருக்கும் வில்லியம் என்பவருக்கும் காதல் அரும்பியுள்ளது. இதன் பலனாக இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் 11 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் கொல்லர். இவருக்கு 56 பேர குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களின் மூலமாக 99 கொள்ளு பேர குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி 100 ஆகியுள்ளது.
இதனால் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கும் கொல்லர் இதுபற்றி பேசுகையில்," ஒன்று இரண்டு குழந்தைகள் இருந்த போது தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். ஆகவே எனக்கு மிகப்பெரிய குடும்பம் வேண்டும் என நினைத்தேன். தற்போது என்னுடைய 100வது கொள்ளு பேர குழந்தையினை கையில் ஏந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
100 வது கொள்ளு பேத்தி
கொல்லரின் கணவர் வில்லியம் கடந்த 2008 ஆம் ஆண்டு மரணமடைந்தார். தற்போது தன்னுடைய மிகப்பெரிய குடும்பத்தினருடன் வசித்துவரும் கொல்லர் இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில், கொல்லரின் 100வது கொள்ளு பேத்திக்கு கொல்லர் வில்லியம் பால்ஸ்டர் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது கொல்லரின் பெயரும் அவருடைய கணவருடைய பெயரும் அந்த குழந்தைக்கு சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொல்லரின் 100வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கல்யாணம் ஆகி 54 வருஷம் ஆயிடுச்சு.." மூன்றாவது முயற்சியில் நடந்த அதிசயம்.. உச்சகட்ட ஆனந்தத்தில் 70's தம்பதி
- நெறய குழந்தைகளை பெத்துக்கங்க..பணத்துக்காக கவலைப்படாதீங்க..ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்..!
- "ஃபர்ஸ்ட் டைம்.." 10 மாச குழந்தைக்கு ரெயில்வே வேலை.. 18 வருசம் கழிச்சு டியூட்டியில சேர்ந்துக்கலாம்.. "என்ன காரணம்.??"
- "நீங்க வாங்குன டிகிரி எல்லாம் வெறும் பேப்பர்".. மெட்ரோ ரயிலில் கீழே உட்கார்ந்து பயணித்த தாய்.. வைரல் கேப்ஷனுடன் ஐஏஎஸ் ஆபிசர் பகிர்ந்த வீடியோ..!
- "20 கோடில ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கும்".. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டுபோன டாக்டர்.. துள்ளிக்குதித்த அப்பா..!
- “பாட்டியை சரியா பாத்துக்க முடியல, அதனால தான்..!” பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த 2 பேத்திகள்..!
- 'சாமி சாமி' பாடலுக்கு ஸ்டெப் போட்டு திகைக்க வச்ச Fire பாட்டி.. ராஷ்மிகா பாத்தா ஷாக் ஆகிடுவாங்க.. இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!
- "கொஞ்சமா அழுதா போதும்".. தன்னுடைய இறுதி ஊர்வலத்துக்கு வருபவர்களுக்கு 92 வயசு பாட்டி போட்ட ரூல்ஸ்.. அதுலயும் 3-வது கண்டிஷன் செம்ம.. வைரல் வீடியோ..!
- கொதிக்கிற பாலைவனத்துல சிக்கிக்கிட்ட 86 வயசு பாட்டி.. கொஞ்சம் கூட யோசிக்காம இளம் பெண் போலீஸ் எடுத்த முடிவு.. கொண்டாடிய மக்கள்..!
- ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!