"வயசு வெறும் நம்பர் தான்.." முதல் முறை திருமணம் செய்த முதியவர்.. அதுவும் இந்த வயசுலயா..??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருவர் மீது காதல் வயப்படவோ, அல்லது ஒருவரை திருமணம் செய்து கொள்ளவோ வயது ஒரு தடையில்லை என்றும், அதற்கு எந்தவொரு வரம்பும் இல்லை என்று பலரும் கூறுவார்கள்.

Advertising
>
Advertising

Also Read | ஷாப்பிங் மாலில் இருந்து கால் தவறி கீழே விழுந்த இளம்பெண்.. பிறந்த நாள் பரிசு வாங்க சென்றபோது நடந்த சோகம்..!

அப்படி திருமணத்திற்கு வயது ஒரு விஷயமே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த 95 வயது முதியவர்.

95 வயசுல..

இதுகுறித்து Wales Online வெளியிட்டுள்ள செய்தியின் படி, 95 வயதான ஜூலியன் மோயிலே (Julian Moyle) என்பவர், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, வலேரி வில்லியம்ஸ் (வயது 84) (Valerie Williams) என்பவரை சர்ச் ஒன்றில் சந்தித்துள்ளார். அந்த சமயத்தில், இவர் தான் தனது மனைவியாக வர போகிறார் என நிச்சயம் ஜூலியன் நினைத்திருக்க மாட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், தனது காதலை வலேரி வில்லியம்ஸிடம் வெளிப்படுத்தி உள்ளார் ஜூலியன்.

23 ஆண்டுகளுக்கு முன் சந்தித்து கொண்ட 'சர்ச்'

ஜூலியனின் காதலுக்கு வலேரியும் சம்மதம் சொல்ல, சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இருவரும் சந்தித்துக் கொண்ட அதே சர்ச்சில் வைத்து, கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வில், ஜூலியன் மற்றும் வலேரி சார்பில் சுமார் 40 பேர் வரை கலந்து கொண்டனர்.

தனது வாழ்நாளில், முதல் முறையாக அதுவும் 95 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட ஜூலியன், இந்த நாளை அற்புதமான நாள் என்றும், ஒரு புத்தாண்டு போல தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல, தனது கணவர் குறித்து பேசிய வலேரி, ஜூலியன் ஒரு சிறந்த ஜென்டில்மேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1954 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஜூலியன் குடி பெயர்ந்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஜோடி தங்களின் ஹனிமூனுக்கு ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் - வலேரி திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. களேபரம் ஆன கல்யாண வீடு..!

OLD MAN MARRIED, LIFE, திருமணம், முதியவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்