"கொஞ்சமா அழுதா போதும்".. தன்னுடைய இறுதி ஊர்வலத்துக்கு வருபவர்களுக்கு 92 வயசு பாட்டி போட்ட ரூல்ஸ்.. அதுலயும் 3-வது கண்டிஷன் செம்ம.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்92 வயதான பாட்டி ஒருவர் தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளின் பட்டியல் குறித்து பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ஒற்றை பெயரால் வந்த குழப்பம்.. 10 நிமிஷத்துல 2 லட்சம் கோடியை இழந்த பணக்காரர்... பாவம் மனுஷன்..!
மனிதர்களுக்கு பொதுவாகவே தங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியின் மீதும் ஒரு எதிர்பார்ப்பும் ஆசையும் இருக்கும். எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும்? இந்த கல்லூரியில் சேர வேண்டும்? எந்த மாதிரியான வேலை? எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை? அதன்பிறகு தனது குழந்தைகளுக்கு எப்படியான எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பது? என்று வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் திட்டமிடுவது மனிதரின் வழக்கம். அந்த வகையில் 92 வயதான மூதாட்டி ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
அழ கூடாது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகிய சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் லில் ட்ரோனியாக் என்னும் மூதாட்டி. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில் தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் அதிகமாக அழ வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில் "நீங்கள் அழலாம். ஆனால் அதிகமாக அழக்கூடாது. உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்ளாதீர்கள். பெர்தா இந்த நிகழ்வுக்கு வரக்கூடாது. அவளை உள்ளே விடாதீர்கள். இறுதியாக எனக்காக கொஞ்சம் மது அருந்துங்கள்" என இந்த பாட்டி குறிப்பிடுகிறார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து யார் அந்த பெர்தா? என்ற கேள்வி எழுந்தது. இதற்காக இன்னொரு வீடியோவை பகிர்ந்த இந்த மூதாட்டி பெர்தாவைப் பற்றி தனியாக ஒரு நாள் பேசுவோம் என்றும், அவர் ஏன் தன்னுடைய இறுதி ஊர்வலத்துக்கு வரக்கூடாது என்பதையும் அப்போது தெரிவிப்பதாகவும் அந்த பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் கலகலப்புடன் வீடியோ போட்டு வரும் இந்த பாட்டியின் பேரன் கெவின் இது குறித்துப் பேசுகையில் "அவர் எப்போதும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பார்ப்பவர். எப்போதாவது ஒருநாள் மரணம் வரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதே நேரத்தில் வாழும் நாட்களை அழகாக்க அவர் முயற்சிக்கிறார். அவருடைய இந்த செயலுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு அளிப்பதுடன் அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்" என்றார்.
சமூக வலை தளங்களில் இந்த வீடியோ 12 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 92 வயதான பாட்டி தன்னுடைய இறுதி ஊர்வலத்திற்கான ரூல்ஸ் குறித்து பேசிய இந்த வீடியோ பலரையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொதிக்கிற பாலைவனத்துல சிக்கிக்கிட்ட 86 வயசு பாட்டி.. கொஞ்சம் கூட யோசிக்காம இளம் பெண் போலீஸ் எடுத்த முடிவு.. கொண்டாடிய மக்கள்..!
- ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!
- நீங்க ரொம்ப 'ஸ்வீட்' பாட்டி.. 86 வயதில் அடித்த லாட்டரி.. குஷியில் செஞ்ச சிறப்பான விஷயம்
- 'தாய், பாட்டிக்கு கொரோனா'... 'கண்முன்னே உயிரிழந்த தந்தை'... 'செய்வதறியாது தனியாக தவித்த சிறுவனின்'... 'நெஞ்சை உருக்கும் சோகம்'!