“ஒரே ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டி!”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி! .. மின்னல் வேகத்தில் பறந்த அடுத்த உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் குடும்பம் ஒன்று நடத்திய பார்ட்டியால் 900 பேர் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஜெர்மனியின் Bielefeld நகரில் ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டியால் ஏராளமான இளைஞர்கள் தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்தப்பட உத்தரவிடப் பட்டுள்ளார்கள். மேலும் இந்த பார்ட்டியில் பெருமளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் 10 பள்ளிகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பார்ட்டியில் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் சரியாகத் தெரியாத நிலையில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி தனிமைப்படுத்தப் படுதலுக்கு செல்ல வேண்டியவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது.
அத்துடன் இன்னும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகாததால், அவையும் வந்த பின் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருமணம் முதலான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என மாகாண கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 1 முதல் 50 பேர் அல்லது அதற்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு முன்பே, உள்ளூர் பொது ஒழுங்கு அலுவலகங்களில்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் 150 பேர் வரை கலந்து கொள்ளலாம் என அனுமதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- சீனாவில் வேகமாகப் பரவும் புதிய நோய்!.. அவசர நிலை பிரகடனம்!.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
- 'அட்மிஷன் வாங்க வரவங்க எல்லாரும்...' 'அந்த கோர்ஸ் தான் வேணும்னு கேக்றாங்க...' - அதுக்கான காரணம் தான் ஹைலைட்...!
- 'கொரோனாவை தொடர்ந்து'... 'சீனாவிலிருந்து பரவும் புதிய வைரஸ்'... 'பாதிப்பு அபாயத்தில் உள்ள இந்தியா'... 'ICMR எச்சரிக்கை!'...
- Tap தண்ணீரில் 'கொடிய' அமீபா... 'கொரோனாவுக்கு நடுவே அமெரிக்காவில் பீதி'... '8 நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- "பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பின்னரே விஜயகாந்த்..."... மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!
- 'தப்பான நட்பால வந்த அந்த பழக்கம்'... 'பிளைட் பிடிச்சு வந்து'... 'பாக்ஸிங் வீரர் ஊரில் பார்த்த வேலை'... 'வெளியான அதிரவைக்கும் பின்னணி!!!'...
- 'சென்னையில கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' '2 ஆஸ்பத்திரியில டெஸ்ட் நடக்குது...' - மக்களுக்கு எப்போது செலுத்தப்படும்...?
- 'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...