நெனச்சதை சாதிக்க 71 வருஷம் காத்திருந்த பாட்டி.. 90 வயதில் நடந்த அதிசயம்.. வியந்து போய் பாராட்டும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த 90 வயதான மூதாட்டி ஒருவர் தற்போது தனது பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நெனச்சதை சாதிக்க 71 வருஷம் காத்திருந்த பாட்டி.. 90 வயதில் நடந்த அதிசயம்.. வியந்து போய் பாராட்டும் நெட்டிசன்கள்..!
Advertising
>
Advertising

Also Read | 'P.E.T பீரியட்ல விளையாடவே விட மாட்றாங்க சார்..' விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் சொன்ன மாணவி..!

உலகில் எத்தனை தடைகள் எதிர்வரினும் துணிச்சலோடு போராடி, கல்வியின் துணையோடு வெற்றிபெறும் மனிதர்களை இந்த சமூகம் எப்போதும் கொண்டாட தவறுவது இல்லை. அவர்களுடைய வாழ்க்கை பல்லாயிரம் பேருக்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியதாக அமைகிறது. அப்படியானவர்களுள் ஒருவர் தான் ஜாய்ஸ் டிஃபாவ். பொதுவாக கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதை இந்த உலகிற்கு மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜாய்ஸ் டிஃபாவ்.

90 YO Woman Graduates from College 71 Years After First Enrolling

இவர் கடந்த 1950 ஆம் ஆண்டு வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் சேர்ந்திருக்கிறார். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் படிப்பை தொடர முடியாமல் போயிருக்கிறது. இதனிடையே டான் ஃப்ரீமேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜாய்ஸ்.  ஆனால் இவர்களது திருமண வாழ்வு சில ஆண்டுகளே நீடித்தது. டான் ஃப்ரீமேன் மரணமடைந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ராய் டிஃபாவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஜாய்ஸ்.

குழந்தைகள், குடும்பம் என ஜாய்சின் வாழ்க்கை உருண்டோடியது. ஆனால், கல்லூரியில் பட்டப்படிப்பை முடிக்கவேண்டும் என்ற அவரது கனவு மட்டும் அப்படியே இருந்திருக்கிறது. இதனிடையே அவரது குழந்தைகள் விட்டுப்போன கல்வியை தொடரும்படி ஜாய்ஸை வலியுறுத்தியிருக்கின்றனர். இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் அதே பல்கலைக்கழகத்திற்கு சென்றிருக்கிறார் ஜாய்ஸ்.

அவரை கண்டு பல்கலைக்கழக அதிகாரிகளே ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து படித்து வந்த ஜாய்ஸ் தற்போது பொருளாதார பிரிவில் பட்டமும் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 71 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் காலேஜில் டிகிரி வாங்கவேண்டும் எனும் தனது ஆசையை நிறைவேற்றி பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறார் ஜாய்ஸ்.

தற்போது 17 பேரக்குழந்தைகளையும் 24 கொள்ளுப்பேர குழந்தைகளையும் கொண்டுள்ள ஜாய்ஸ் தனது கல்வி குறித்து பேசுகையில்,"நீங்கள் விரும்பியதை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது பயணத்தை விட்டுவிடாமல் தொடருங்கள். நிச்சயம் ஒருநாள் வெற்றியை அடைவீர்கள்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

Also Read | மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம்.. சுற்றி வளைத்த போலீஸ்..!

OLD WOMAN, GRADUATES, COLLEGE, FIRST ENROLLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்