'திடீரென இடிந்து விழுந்த புதிய பாலம்'... 'கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்'... '10 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேசியாவில் புதிய பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 9 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்துவரும் கனமழை காரணமாக, பெங்குலு மாகாணத்தின் கெளா் நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 30 போ் நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  பெரும்பாலும் மாணவர்கள் ஆற்றை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மாணவா்களில் சிலா் பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் விழுந்தனா். சிலா் பாலத்தின் தடுப்பை பற்றிக் கொண்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், ஆற்றுக்குள் சிக்கி தவித்த 20 பேரை உயிருடனும் சிறு காயங்களுடனும் மீட்டனர். ஆனால் 9 போ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கி காணாமல் போன மாணவா் ஒருவரை மீட்க, மீட்பு குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாணவா்கள் விழுந்த ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து காணப்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ACCIDENT, BRIDGE, STUDENTS, COLLAPSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்