இந்த '9 நாட்டுல' இப்போ 'கொரோனா' இல்ல... மொத்தமா ஒழிச்சு... சும்மா 'பட்டைய' கெளப்பிட்டாங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதிலுமுள்ள சுமார் 190 நாடுகள் வரை கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், மிகுதியான நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல நாடுகள் கொரோனாவை சிறிய அளவில் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் அதன் பிடியில் இருந்து முழுமையாக இன்னும் மீள முடியவில்லை. ஆனால் இந்த கொடிய வைரஸ் பிடியில் இருந்து 9 நாடுகள் முழுமையாக மீண்டுள்ள தகவல் உலகளவில் சற்று நம்பிக்கையளிக்க கூடிய வகையில் உள்ளது.
சென்னையில் பாதி அளவிலேயே மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்து, கொரோனா பரவிய உடன் ஊரடங்கை கடுமையாகி கடைபிடித்தது. 75 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்கு கண்டறியப்பட்ட கடைசி நோயாளியும் ஜூன் 8 அன்று குணமடைந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியா-வில் கடவுளின் அருளால் கொரோனா வைரசை முழுமையாக ஒழித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா பாதித்தவர்கள் தகவல்களை ஆறு வாரங்களுக்கு முன் தான்சானியா நிறுத்திக் கொண்ட நிலையில் அதிபர் கொரோனா ஒழிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
குட்டி நாடான வாடிகன், கடந்த 4 ஆம் தேதி கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 14 பேர் மட்டுமே அங்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நோயாளியும் நான்காம் தேதி குணமடைந்து விட்டதாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.
9 லட்சம் பேர் மட்டுமே உள்ள ஃபிஜி தீவில் 18 பேர் மட்டுமே கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 45 நாட்களில் புதிய தொற்று உறுதியாகாத நிலையில், முழுமையாக குணமடைந்து விட்டதாக பிரதமர் பிராங் பைனிமாரமா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான மாண்டிநெக்ரோ, முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69 வது நாளில் கொரோனவை முழுமையாக ஒழித்துள்ளது. மொத்தம் 324 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டும் உயிரிழந்தனர். கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடு மான்டிநெக்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலில் 115 குட்டி தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் பகுதியில், 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் 18 ஆம் தேதியே கொரோனா இல்லாத நாடாக மாறி விட்டது.
மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள St Kitts and Nevis நாட்டில் கடந்த மாதம் 19 ஆம் தேதி 15 நோயாளிகளும் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த 15 பேரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தான்.
கிழக்கு திமோர் நாட்டில் மொத்தமே 24 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அவர்களும் குணமடைந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை.
பசிபிக் தேசமான பபுவா நியூகீனியிலும் 24 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..!
- மிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்!... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...
- 'இந்த நேரத்துல எப்படி வேன்'ல 30 பேர்'...'கோரமாக மோதிய கண்டெய்னர்'...சல்லி சல்லியா தெறித்த உடல்கள்!
- ‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!
- பிரபல ‘டேட்டிங்’ ஆப்பில் அறிமுகமானவரை... ‘நம்பி’ சென்ற பெண்ணுக்கு ‘பிறந்தநாளன்று’ நேர்ந்த கொடூரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘குடும்பத்துடன் டூர் போன தொழிலதிபர்’.. எதிர்பாராமல் நடந்த கோரவிபத்து.. கணவன், மனைவி அடுத்தடுத்து பலியான சோகம்..!
- “மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!
- ‘ஒரே போட்டியில் 327 ரன்கள்’.. சத்தமே இல்லாம கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீரர்..!
- ‘4 பந்துகளில் மாறிய ஆட்டம்’.. ‘பேட்ஸ்மென்களை மிரட்டிய மலிங்கா’.. ‘கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை’..
- ‘சந்தேகத்துக்குரிய வகையில் விளையாடியதாக’.. ‘பிரபல கேப்டனுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு..?’