"நான் இன்னும் இளமையா தான் இருக்கேன்".. சிங்கிளா பசிபிக் பெருங்கடலை கடந்த தாத்தா.. இந்த வயசுல இப்படி ஒரு சாதனையா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானை சேர்ந்த வயதான நபர் ஒருவர் பசிபிக் பெருங்கடலை தனியாக கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | நாய் குரைத்த சத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. டாட்டூ கலைஞருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

பலருக்கும் பயணங்கள் மனதிற்கு நெருக்கமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அதுவும் கடற்பயணம் என்றால், விரும்பாத ஆட்களே இருக்கமாட்டார்கள். மனிதர்களிடையே இருக்கும் இந்த கடல் மீதான ஆசை தான் உலகின் பல்வேறு நாடுகள் கண்டுபிடிக்கப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றன. கடல் பயணத்தின் மீது கொண்ட ஆசையை அடைய வயது ஒரு தடையில்லை என உலகிற்கு நிரூபித்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த 83 வயதான முதியவர் ஒருவர்.

ஆசை

ஜப்பானைச் சேர்ந்தவர் கெனிச்சி ஹோரி. இவருக்கு 83 வயதாகிறது. கடல் பயணத்தின் மீது தீராத காதல் கொண்ட கெனிச்சி, பசிபிக் பெருங்கடலை சுற்றிவர முடிவெடுத்திருக்கிறார். அதுவும் தனியாளாக. வயது மூப்பு, கணிக்க முடியாத கடல் வானிலை ஆகியவற்றை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தனது இலக்கை துரத்த நினைத்திருக்கிறார் இந்த தாத்தா.

தனது லட்சியமான பசிபிக் பெருங்கடலை கடக்கவேண்டும் என்பதை நிறைவேற்ற முடிவெடுத்த கெனிச்சி, கடந்த மார்ச் மாத இறுதியில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ துறைமுகத்திலிருந்து கெனிச்சி பயணத்தை துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே மிகப்பெரிய தடை ஒன்றை அவர் சந்திக்க நேரிட்டது.

குலுங்கிய படகு

19-அடி நீளம், 990-கிலோ எடையுள்ள சன்டோரி மெர்மெய்ட் III படகையே தனது பயணத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தார் கெனிச்சி. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே கடலில் ஏற்பட்ட புயலால் அவரது படகு தடுமாறியிருக்கிறது. இருப்பினும் தாக்குப்பிடித்து பயணித்த கெனிச்சி, படிப்படியாக வானிலை மாறுவதை கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

தொடர்ந்து பயணித்த கெனிச்சி, ஏப்ரல் நடுப்பகுதியில் அவர் ஹவாய் சென்றடைந்தார். பின்னர் இடைவிடாது 69 நாட்கள் பசிபிக் பெருங்கடலில் பயணித்து சனிக்கிழமை அதிகாலை ஜப்பானின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிய் ஜலசந்தியை வந்தடைந்தார் ஹோரி. அதன்பின் தனது சொந்த துறைமுகமான ஷின் நிஷினோமியாவிற்கு சென்ற அவரை உள்ளூர்வாசிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இளமை

இதுகுறித்து பேசிய கெனிச்சி,"நான் இன்னும் என் இளமையின் நடுவில் இருக்கிறேன். நான் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை இது காட்டுகிறது" என்றார். 83 வயதில், பசிபிக் பெருங்கடலை கடந்த கெனிச்சி ஹோரியை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

Also Read | “கோலி, ரோஹித் & கே எல் ராகுல் கிட்ட இருக்குற பிரச்சன இதுதான்”… முன்னாள் கேப்டன் கபில்தேவ் சொன்ன விஷயம்

JAPANESE MAN, OLD MAN, PACIFIC OCEAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்