'எட்டு வயதில் எண்பது வயதான தோற்றம்...' 'முதுமையுடன் போராடிய குழந்தை...' அதிர்ச்சி சம்பவம்... !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எட்டு வயது குழந்தை தன் முதுமையின் காரணமாக இறந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சம்பவமாக அமைந்துள்ளது.

அண்ணா சாகிடோன், உக்கிரைனை சேர்ந்த 8 வயது சிறுமி. இச்சிறுமிக்கு உலகில் 160 பேரை மட்டும் இதுவரை தாக்கியுள்ள மிக அரிதான புரோஜீரியா என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

புரோஜீரியா நோய் (“எச்ஜிபிஎஸ்”) என்பது குழந்தைகளில் விரைவான வயதான தோற்றத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய, அபாயகரமான மரபணு நிலை. இதன் பெயர் கிரேக்க மொழியிலிருந்து உருவானது மற்றும் "முன்கூட்டியே பழையது" என்று பொருள்படும்.

இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாதாரண குழந்தைகள் போல் ஆரோக்கியமாகப் பிறந்தாலும், வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் விரைவான வயதான பல பண்புகளைக் காட்டத் தொடங்குகிறார்கள்.

புரோஜீரியா அறிகுறிகளில் வளர்ச்சி தோல்வி, உடல் கொழுப்பு மற்றும் கூந்தல் இழப்பு, வயதான தோற்றமுடைய தோல், மூட்டுகளின் விறைப்பு, இடுப்பு இடப்பெயர்வு, பொதுவான பெருந்தமனி தடிப்பு, இருதய (இதய) நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும்.பெரும்பாலும் புரோஜீரியா கொண்ட குழந்தைகள் சராசரியாக பதினான்கு வயதில் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியால் (இதய நோய்) இறக்கின்றனர்.

அண்ணா சாகிடோனும், இந்நோயின் தாக்கத்தால் வேகமாக வயதான போதும் எலும்புகள் மெதுவாக வளர்ந்ததால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். எட்டு வயதே நிறைவு பெற்றிருந்தாலும் எண்பதுவயதானவரின் உடல் முதுமையுடன் போராடி வந்த நிலையில், உள் உறுப்புகள் செயலிழந்து அண்ணா சாகிடோன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

PROGERIADISEASE

மற்ற செய்திகள்