‘சுனாமி எச்சரிக்கை’!.. ‘மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’.. அமெரிக்காவை அதிரவைத்த நிலநடுக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி 28-ம் தேதி உள்ளூர் நேரம் இரவு சுமார் 10 மணியளவில் 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்க பசிபிக் பிரதேசங்களான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1965-ம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அலாஸ்கா தீவுகளில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் சேத விவரங்கள் குறித்து உடனடியாக விவரம் தெரியவில்லை. இந்த நிலையில், மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் நில அதிர்வு காரணமாக வீடு ஒன்று குலுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்