'எல்லாரும் கொரோனா பீதியில பயந்து ஓடிட்டு இருக்கும்போது... அங்க ஒரு கூட்டம் மட்டும் 'கொரோனா'வால சந்தோஷமா இருக்கப்போகுது!'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 49 பேர் இறந்து உள்ளனர். மேலும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி வெளியிட்டார். அதில் "கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகமாக இருப்பதால் சிறையில் இருக்கும் கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை தற்காலிகமாக விடுவிப்பதாக" அறிவித்தார். மேலும், "கைதிகளை விடுவிப்பதால் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து கவனிக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

IRAN, CORONAVIRUS, PRISONERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்