'இஷ்டம் போல செய்யுங்க...' உங்கள யாரு கேப்பா...? 'ஆனா எங்களால சகிச்சிட்டு இருக்க முடியாது...' - தாலிபான்களுக்கு எதிராக '70 ஆசிரியர்கள்' சேர்ந்து எடுத்த 'அதிரடி' முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் பல்கலைக்கழகத்தின் (Kabul University) பிஎச்டி படித்த துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை (mohammad osman babury) தாலிபான்கள் (Talibans) பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்துள்ளனர்.
இந்த நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.ஏனெனில், கடந்த வருடம் அஷ்ரப் கெய்ரத் பதிவிட்ட ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர். அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை சரி தான் என நியாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக, அஷ்ரப் கெய்ரத் முந்தைய அரசின் கல்வி அமைச்சகத்தில் பணிபுரிந்ததாகவும் மற்றும் ஆப்கானின் IEA பல்கலைக்கழகங்களின் மதிப்பீட்டு அமைப்பின் தலைவராக இருந்தார் என்றும் பிரபல செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு, அறிவார்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பிஎச்டி பட்டதாரியை மாற்றிவிட்டு இளம் இளங்கலை பட்டதாரியை தலைவராக நியமித்ததால் மக்கள் கோபமாக உள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தாலிபான்கள் பதவி நீக்கம் செய்ததைக் கண்டித்து, அங்கு பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட சுமார் எழுபது ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதற்கு முன்பாக, தாலிபான்கள் திங்களன்று (20-09-2021) அதிகாரப்பூர்வமாக ஒரு அரசு பல்கலைக்கழகத்தின் பெயரை முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் நிறுவனர் புர்ஹானுதீன் ரப்பானியின் பெயரை காபூல் பல்கலைக்கழகத்துடன் முன்பாக இணைத்தனர்.
புர்ஹானுதீன் ரப்பானி 2009-ஆம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே செகண்ட்ல என் அதிகாரம், அந்தஸ்து எல்லாமே போச்சு...' 'திடீர்னு ஆபீஸ் உள்ள வந்தாங்க...' 'அப்படி' சொன்னதும் என் நெஞ்சே 'வெடிச்சு' போச்சு...! - யார் இந்த ஹக்கானிகள்...?
- '20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி கொண்டு வந்தாங்க'... 'போச்சா, ஒரே அறிவிப்புல எல்லாம் போச்சு'... 'இந்த பாவம் சும்மா விடுமா'?... பொங்கியெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
- இந்த 'ரண' களத்துலையும் ஒரு கிளுகிளுப்பு...! 'ஒரு கையில துப்பாக்கி...' 'மறு கையில குழந்தைங்க...' எல்லாரும் சேர்ந்து 'எங்க' கிளம்பிட்டாங்க...? - வைரலாகும் புகைப்படங்கள்...!
- உலகின் சக்தி வாய்ந்த '100 நபர்கள்' பட்டியலில் 'அவர்' பெயரா...? 'ரொம்ப சைலன்டான மனுஷன்...' 'வெளியவே வர மாட்டாரு...' - 'டைம்' இதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு...!
- 'இங்க ஒண்ணு பேசுறது...' 'வெளிய போய் வேற ஒண்ணு சொல்றது...' 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க...' 'அஷ்ரஃப் கனி அன்னைக்கு 'என்ன' சொன்னார் தெரியுமா...? - கடுப்பில் அமெரிக்கா...!
- எப்படி 'இந்த இடத்த' மறக்க முடியும்...! ஒருகாலத்துல 'என்னெல்லாம்' நடந்த இடம் தெரியுமா...? 'மொத தடவையா பயம் இல்லாம இங்க வந்துருக்கேன்...' - நெகிழும் தாலிபான்...!
- 'அவங்க ரொம்ப யோக்கியம்ன்னு சொன்னிங்க'... 'வீட்டுக்குள்ள என்ன இருக்குன்னு பாருங்க'... 'இது யார் வீடு தெரியுமா'?... தாலிபான்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
- 'லீக்' ஆன தாலிபான் 'ஒருத்தரோட' ஆடியோ...! 'இதெல்லாம்' வேற நடந்துருக்கா...? 'எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சிட்டு இருந்துருக்காங்க...' - வெளியான பகீர் தகவல்கள்...!
- 'எங்கள கைவிட்றாதீங்க ப்ளீஸ்'!.. இழுத்து மூடும் அபாயத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!.. ஆஸ்திரேலியாவிடம் மன்றாடும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம்!
- 'இது எதேச்சையாக நடக்குதா'... 'இல்ல பக்கா பிளான் பண்ணி பன்றாங்களா'?... 'ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க'... செம கடுப்பில் அமெரிக்கா!