நடுக்கடலில் சொகுசு படகை தாக்கிய மின்னல்.. ஆடிப்போன பயணிகள்.. திக் திக் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகு மீது மின்னல் தாக்கிய நிலையில், கடலோர காவல்படை அந்த பயணிகளை மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று படகில் மகிழ்ச்சியாக இருந்த இந்த நபர்கள் கொஞ்ச நேரத்தில் இயற்கையின் ஆக்ரோஷத்தை கண்டு ஆடிப்போயிருக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். அப்போது வானம் இருண்டு மழைக்கு தயாராகிறது. படகின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவரை பயணி ஒருவர் புகைப்படம் எடுக்க, அப்போது திடீரென மின்னல் ஒன்று படகை தாக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிடுகிறார்கள்.
மீட்பு
இதனை தொடர்ந்து புளோரிடா விரிகுடா பகுதியில் மேற்கு பகுதியில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் சொகுசு படகில் மின்னல் தாக்கியதாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிகளை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.
அதன்பிறகு, கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்த ஹெலிகாப்டர் பயணிகளை மீட்கும் பணியில் இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து பெரிய இரும்பு வலை போன்ற அமைப்பை கீழே இறக்கிய மீட்பு படையினர், அதன்மூலம் ஒவ்வொருவராக ஹெலிகாப்டரில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலமாக படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கடலோர காவல்படை தெரிவித்திருக்கிறது.
வழக்கமான ஒன்றுதான்
இதுகுறித்து பேசிய கடலோர காவல்படை விமானி லெப்டினன்ட் டேவிட் மெக்கின்லி "புளோரிடா கடல் சூழலில் மின்னல் மற்றும் புயல்கள் வழக்கமாக படகுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தாம். , இது பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் படகோட்டிகள் கடல் VHF ரேடியோ உள்ளிட்ட அனைத்து தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக்கு தயாராக இருந்தனர்" என்றார்.
இந்நிலையில் மின்னல் தாக்கிய படகில் இருந்த பயணிகள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்படும் வீடியோவை அமெரிக்க கடலோர காவல்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீறி ஓடிய காட்டாற்று வெள்ளம்.. சிக்கியவர்களை நீரில் குதித்து காப்பாற்றி ஹீரோவான வாலிபர்.. இதயம் வென்ற வீடியோ
- “எங்களை காப்பாத்துங்க”.. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பெண்ணின் போன் கால்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 10 வருஷமா பூட்டுன வீட்டுக்குள்ள தவித்த பாட்டி.. பசி தாங்க முடியாம மண்ணை தின்ற சோகம்..!
- சூப்பர் மேன் சார் நீங்க... கிராசிங்கில் சிக்கிய முதியவர்... ஓடும் ரயிலை நிறுத்திய ஓட்டுனர் !
- 'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?
- 'வலிப்பு வந்து கண்ணுக்கு முன்னாடி துடித்த எஜமானர்'... 'சமயோஜிதமாக செயல்பட்ட செல்ல நாய்'... வாயடைத்து போன மருத்துவர்கள்!
- ‘படிக்க வெச்ச இன்ஜினியரிங் வீண் போகல!’... கடலில் மூழ்கியவர்களின் உயிரைக் காத்த ட்ரோன்.. கெத்து காட்டிய கல்லூரி மாணவர்!
- VIDEO: இதயத்துடிப்பு நின்னு போச்சு... இப்ப என்ன செய்ய?.. பதறிப்போன இளைஞர்... நெகிழவைக்கும் சம்பவம்!
- ‘நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்!’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை! .. 15 மணி நேரம் என்ன நடந்தது?
- காலையில கேட்ட ‘அழுகுரல்’ இப்போ கேட்கல.. ‘கடவுளே’ குழந்தைக்கு என்ன ஆச்சு..? களத்தில் இறங்கிய ராணுவம்..!