'ஒரு வென்டிலேட்டரில்' 7 பேருக்கு 'சிகிச்சை...' 'புதிய சாதனத்தை' உருவாக்கிய 'பாகிஸ்தான் டாக்டர்...' 'வித்தியாசமாக' நன்றி தெரிவித்த 'அமெரிக்க மக்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒரு வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய சாதனத்தை உருவாக்கிய டாக்டருக்கு அமெரிக்க மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உடலில் நுழைந்த பின் மெல்ல, மெல்ல சுவாசத்தை நிறுத்தும் அளவிற்கு கொடூரமாக இருப்பதால், செயற்கை சுவாசம் வழங்கும் வென்டிலேட்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் வென்டிலேட்டர் பொருத்தப்படாவிட்டால், நோயாளியை காப்பாற்ற முடியாத நிலையே தற்போதைய சூழலில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வென்டிலேட்டர் பற்றாக்குறையால் உயிரிழப்பைத் தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அமெரிக்க வாழ் பாகிஸ்தான் டாக்டர் அன்வர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியை பயன்படுத்தி ஒரு ஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே சமயத்தில் 7 நோயாளிகளுக்கு உதவ முடியும். அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர் அமெரிக்க மக்கள் மத்தியில் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.
அவரது மருத்துவப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சவுத் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டின் அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தி ஆச்சரியப்படுத்தினர்.
கார்களுக்குள் இருந்தபடி வாழ்த்து பேனர்களை தாங்கியும், கைகளை அசைத்தும் சென்றனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அன்வர், பதிலுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். தன் மீது மரியாதையும் அன்பும் வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர், பேஸ்புக்கில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வரும் அன்வர், கனெக்டிகட் மாநில செனட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிர்ச்சி'... 'இரவு பகலா மக்கள் பணி'... 'இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான 'முதல் காவல் அதிகாரி'!
- 'என்னோட மக்கள நான் பாத்துக்குவேன்!'.. சொந்த நாட்டு மருத்துவமனையில்... சுகாதாரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த இளவரசி!
- கொரோனா எதிரொலி!.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்!.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்!
- 'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி?.. பிரம்மிக்கவைக்கும் படைப்பு!
- நுரையீரலை மட்டும் தான் பாதிக்கிறதா?.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- 'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா?
- 'நீங்க சொல்ற அந்த வௌவால் வூஹான்-லயே இல்ல!'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. பின் வைரஸ் பரவியது எப்படி?
- ஆந்திர முதல்வர் ‘ஜெகன்மோகன் ரெட்டி’க்கு கொரோனா பரிசோதனை..! வெளியான தகவல்..!
- ஊரடங்கால் 'காண்டம்' மட்டுமில்ல... 'இந்த' விற்பனையும் படுஜோரா நடக்குதாம்!
- இன்னும் 2 நாள்ல 'கம்பெனி' ஓபன் ஆகலேன்னா... 'சம்பளத்தை' கட் பண்ணிருவோம்... ஊழியர்களுக்கு 'செக்' வைத்த 'முன்னணி' நிறுவனம்!