30 வயசு வித்தியாசம்.. இளம் காதலனை கரம்பிடிக்க.. 14,000 கிலோமீட்டர் பயணம் செய்த 60 வயது பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்காக, பெண் ஒருவர் செய்த விஷயமும், அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "உங்களுக்கு நோபல் பரிசு அறிவிச்சிருக்காங்க".. கொண்டாடிய பணியாளர்கள்.. விஷயத்தை கேட்டதும் ஆராய்ச்சியாளர் கொடுத்த ரியாக்ஷன்.. Cute வீடியோ.!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் Deborah. இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார்.

அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது இரண்டு பழங்குடியின வாலிபர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் தான் Saitoty. இவருக்கு தற்போது 30 வயதாகிறது. மேலும், அந்த பழங்குடி வாலிபர்களுடன் டெபோரா புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.  இதன் பின்னர், சைடோட்டி என்ற வாலிபருடனும் அதிக நேரம் டெபோரா உரையாடி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமையான விஷயங்கள் இருப்பதையும் இருவரும் உணர்ந்துள்ளனர்.

இதன் பின்னரும் அவர்கள் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டெபோராவை திருமணம் செய்யவும் வாலிபரான  Saitoty விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், 60 வயதான டெபோரா, தனியாக வாழ்ந்து வந்த போதிலும் தன்னை விட 30 வயது குறைவான வாலிபரை மனக்கவும் முதலில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தனது மகன் மற்றும் மகளிடமும் இது பற்றி டெபோரா தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சொல்லபடுகிறது. அப்படி இருக்கையில் இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் Saitoty-ஐ சந்திக்க தான்சானியா கிளம்பிய டெபோரா, அவரது காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு Saitoty மற்றும் டெபோரா ஆகியோர், பழங்குடியின முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது இளம் கணவருக்காக சுமார் 14,400 கிலோ மீட்டர் பயணம் செய்து தான்சானியாவிலும் டெபோரா வசித்து வருவதாக கூறப்படுறது.

இது பற்றி பேசும் டெபோரா, "அமெரிக்காவில் வாழ வேண்டும் என்பதற்காக தான் Saitoty என்னை திருமணம் செய்து கொண்டதாக பலரும் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அவர் அப்படியில்லை. அதே போல, எனது பேரன் தான் Saitoty என்றும் சிலர் குறிப்பிடும் போது, அவரை அது வருத்தம் அடைய செய்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மகிழ்சயாக வாழ்வதில் தான் கவனம் செலுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

அதே போல, தங்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் பற்றிய விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், அது வெறும் எண் தான் என்ற கணக்கில் Saitoty மற்றும் டெபோரா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.

Also Read | திருமணத்தை தாண்டிய உறவு.. "15 நாள் கழிச்சு".. காணாம போன நபர் பத்தி கெடச்ச அதிர்ச்சி தகவல்!!

OLD WOMAN, MARRIED, TRIBAL GUY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்