கேம் விளையாட போனை கொடுத்த அப்பா.. ஆசையா வாங்கி மகன் செஞ்ச வேலை.. மெசேஜை பார்த்து திகைச்சு போய்ட்டாரு மனுஷன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தனது அப்பாவின் போனில் 6 வயது சிறுவன் ஒருவர் வரிசையாக உணவு ஆர்டர் செய்ய மொத்த பணமும் காலியாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?

பொதுவாக குழந்தைகளிடம் செல்போனை கொடுத்து பழக்குவது பிற்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதுவும் இந்த தலைமுறையில் சிறிய வயதிலேயே போன் பற்றியும் இணைய பயன்பாடுகள் குறித்தும் குழந்தைகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆகவே, பெற்றோர் குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென நிபுணர்கள் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த கெய்த் ஸ்டோன்ஹவுஸ் என்பவருக்கு சோதனையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதற்கு காரணம் அவருடைய ஆறு வயது மகன் தான். கெய்த் ஸ்டோன்ஹவுஸ் மிச்சிகன் பகுதியை சேர்ந்தவர். இவருடைய மனைவி கிறிஸ்டின். இந்த தம்பதிக்கு மேசன் என்னும் 6 வயது மகன் இருக்கிறான். சமீபத்தில் ஒரு நாள் கிறிஸ்டின் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் கெய்த் ஸ்டோன்ஹவுஸ் மற்றும் மேசன் இருவரும் இருந்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, மேசனுக்கு போரடிக்க கூடாது என்பதற்காக தனது செல்போனை கொடுத்திருக்கிறார் கெய்த். அங்குதான் முதல் சிக்கலே வந்திருக்கிறது. வீட்டு வேலைகளில் அவர் மூழ்கியிருந்த நிலையில் அடுத்தடுத்து உணவு டெலிவரிகள் வந்திருக்கின்றன. கிறிஸ்டின் பேக்கரி வைத்திருந்ததால் அது சம்பந்தமான பொருட்கள் வந்திருக்கலாம் என கெய்த் நினைத்திருக்கிறார். ஆனால், மீண்டும் உணவு டெலிவரி நபர் வந்தபோது அவருக்கு சந்தேகம் வரவே தனது செல்போனை வாங்கி பார்த்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது கெய்த் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். அடுத்தடுத்து தனது போனில் உணவு ஆர்டர் செய்யப்பட்டிருப்பது அவருக்கு அப்போதுதான் தெரியவந்திருக்கிறது. இதுபற்றி தனது மகனிடம் பொறுமையுடன் பேச நினைத்திருக்கிறார் கெய்த். அப்போது தான் ஆர்டர் செய்த பீட்சா இன்னும் வரவில்லை என மகன் சொல்ல அந்த திருணத்தில் சிரிப்பதா? அல்லது அழுவதா? என தெரியாமல் தவித்ததாக சொல்லியிருக்கிறார் கெய்த்.

Images are subject to © copyright to their respective owners.

மேசன் தனது அப்பாவின் போனில் இருந்து 1000 அமெரிக்க டாலருக்கு உணவுகள் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 80,000 ரூபாய். இந்நிலையில் தனது அக்கவுண்டில் இருந்த பணம் கலியாகிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் கெய்த்.

Also Read | "விமானத்துல போகணும்னு ரொம்ப நாள் ஆசை.. ஆனா முடியல".. வீட்டையே விமானம் மாதிரி கட்டிய தொழிலாளி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்..!

LITTLE BOY, ORDER, ORDER FOOD, PHONE, FATHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்