'எங்க மொத்த கனவும் சிதைஞ்சு போச்சு'...'பிறந்து 6 வாரங்களே ஆன பிஞ்சு'...நெஞ்சை நொறுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள முதல் இளம் வயது மரணம், உலகையே நொறுங்கி போக செய்துள்ளது. இதனால் எத்தனை கொடுமைகளை இன்னும் பார்க்க வேண்டுமோ என பலரும் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ்,  தற்போது உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 203 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸினால், உலகமுழுவதும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பபின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்கள்.

இந்தசூழ்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு பிறந்து 6 வாரங்களே ஆன இளம் பிஞ்சு ஒன்று கொரோனா தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த தம்பதியின், சந்தோசம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென அந்த குழந்தைக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில கவர்னர் நெட் லமொண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்ததை அறிந்த அந்த தம்பதி மருத்துவமனையிலேயே கதறி அழுதார்கள். எங்கள் குழந்தையின் மீது வைத்திருந்த எல்லா கனவும் இப்படி சுக்குநூறாக உடைந்து போய்விட்டதே என கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்ககளை குளமாக்கியது. இதற்கிடையே பிறந்து 6 வாரங்களே ஆக குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CORONA, CORONAVIRUS, COVID-19, US

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்