"கல்யாணத்துக்கு முன்னாடி வீடியோ கால்-லாம் தப்பு".. மேட்ரிமோனியில் வலைவிரித்த பெண்.. காசை வாரி இறைத்த இளைஞருக்கு வந்த திடீர் சந்தேகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் திருமணம் செய்துகொள்வதாக இளைஞரிடம் பணம் பறித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு 7 மாத கால சிறைத்தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
சிங்கப்பூரில் வசித்துவரும் இந்தியரான கோவிந்தனசேகரன் முரளிகிருஷ்ணா தனது மகனுக்கு பெண்தேட முடிவெடுத்திருக்கிறார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் தனது மகனின் பெயரில் புரொஃபைல் ஒன்றை துவங்கியுள்ளார். அப்போது, கீர்த்தனா என்னும் பெண் புரொஃபைலை பார்த்த முரளிகிருஷ்ணா தனது மகனிடம் காட்டியுள்ளார். குடும்பத்தினருக்கு பெண்ணின் புகைப்படம் மற்றும் படிப்பு ஆகியவை பிடித்துப்போகவே தொடர்ந்து அந்த பெண்ணிடம் விஷயத்தை கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வேலை
வாட்சாப் மூலமாக கீர்த்தனா என்னும் அந்த பெண்ணிடம் திருமணம் குறித்து முரளிகிருஷ்ணா பேச, அப்பெண்ணும் தனது தாயாரிடத்தில் இதுபற்றி பேசுவதாக கூறியுள்ளார். தான் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு படையில் வேலைபார்த்து வருவதாகவும், வீடியோ கால் பேச இங்கே அனுமதி இல்லை எனவும் அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்க்கு முன்னர் வீடியோ கால் பேசுவது தவறானது எனவும் உருட்டியுள்ளார் அந்த பெண்.
இதனை அடுத்து மாத கணக்கில் முரளி கிருஷ்ணாவின் மகனும், கீர்த்தனா என்ற பெயரில் இருந்த பெண்ணும் வாட்சப் மூலமாக பேசிவந்திருக்கின்றனர். இந்நிலையில் மாப்பிள்ளையிடமும் அவரது அப்பாவிடமும் அவ்வப்போது பணத்தை வாங்கியுள்ளார் அந்த பெண். இப்படி மொத்தமாக 5,000 சிங்கப்பூர் டாலர்களை வாங்கிய அந்த பெண் திடீரென அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.
புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த முரளிகிருஷ்ணாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் சிங்கப்பூரில் வசித்துவந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மல்லிகா ராமு என்னும் 51 வயது பெண்மணி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தனது உறவினர் ஒருவருடைய புகைப்படத்தை தனது புகைப்படமாக புரொஃபைலில் வைத்து முரளி கிருஷ்ணாவை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும், இவர் மீது 15 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற வழக்கும் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த வழக்கில் ஏற்கனவே சிறைத்தண்டனை பெற்ற மல்லிகா கணவனை இழந்தவர் என்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இதுவரையில் மேட்ரிமோனி மூலமாக ஆண்களை ஏமாற்றி 2.25 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை இவர் பெற்றிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், முரளிகிருஷ்ணா தொடுத்த வழக்கில் மல்லிகா என்னும் 51 வயது பெண்மணிக்கு 7 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சிங்கப்பூர் நீதிமன்றம்.
Also Read | "கணவரை கொலை செய்வது எப்படி..?" புத்தகம் எழுதிய 71 வயது பெண்மணிக்கு 25 வருடம் சிறை தண்டனை.. என்ன நடந்தது.?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?
- தண்டனைக்கு முன்பு அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட தர்மலிங்கம்.. சிங்கப்பூர் நீதிமன்றம் நிறைவேற்றிய உச்சபட்ச தண்டனை.. யார் இந்த நாகேந்திரன் தர்மலிங்கம்?
- அடுத்த லிஸ்ட் ரெடி.. இந்தியாவை உளவு பார்க்கும் சீனா.. 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை!
- செய்யாத குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. 14 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த 'உண்மை'.. "அடப்பாவி, எல்லாம் பண்ணது நீ தானா?"
- கிரிப்டோகரன்சிக்கு புதிய ரூல்ஸ்! சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட தகவல்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்
- இப்படியொரு ‘தண்டனை’ கொடுப்பது இதுதான் முதல்முறை.. நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்து.. நீதிமன்றம் ‘பரபரப்பு’ தீர்ப்பு..!
- அன்னைக்கு கப்பல்ல 'என்ன' நடந்துச்சுன்னா... 'உண்மையை ஒப்புக்கொண்ட கேப்டன்...' 'அதிரடி' நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்...!
- 'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!
- 'தைரியமா' இருந்துக்கப்பா...! 'மனச தளர விட்டுராத...' நேரில் சந்தித்து ஆறுதல்...' - 'கண்ணீர்' மல்க விடைபெற்ற ஷாருக் கான்...!
- 'ஜெயில்'ல இருந்து 'ரிலீஸ்' ஆன உடனே மொத வேலையா 'அந்த விஷயத்த' பண்ண போறேன்...! - ஆர்யன் கான் உருக்கம்...!