உக்ரைனில் இருந்து வீடு திரும்பும் இந்தியர்கள்.. முதல்கட்டமாக 470 பேரை மீட்டுக்கொண்டு கிளம்பியது ஏர் இந்தியா

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை மீட்க சென்ற விமானம் இன்று இரவு டெல்லி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலகை ஆளப்போகும் விளாடிமிர் புதின்.. யாராலும் தடுக்க முடியாது.. முன்கூட்டியே கணித்த பாபா வங்கா பாட்டி

ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் நாட்டின் மீது போர் நடத்தி வரும் நிலையில் குண்டு மழை பொழிந்து அங்கிருக்கும் மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் உக்ரைனில் வாழும் இந்தியர்களை மீட்டு வர ஏர் இந்தியா விமானம் உக்ரைன் புறப்பட்ட நிலையில் அங்கு போர் தொடங்கியதால் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது.

உக்ரைனில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவுவதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள் இந்திய அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்து வரப்படுகின்றனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை 3.40 மணிக்குப் புறப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 10 மணியளவில் புகாரெஸ்ட் நகரத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும், உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள் இந்திய அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம்  இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக சுமார் 470 இந்தியர்களை அழைத்துக்கொண்டு முதல் விமானம் தற்போது புறப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணிக்கு மும்பை வந்தடையும் என எதிர்பாக்கப்படுகிறது.

முன்னதாக, ஏர் இந்தியா புகாரெஸ்டுக்கு 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அவை திட்டமிட்டபடி புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11 நாடுகள் சேர்ந்து நின்னு எதிர்த்தா பயந்துருவோமா? ஐநா-வில் போடப்பட்ட தீர்மானம்.. சுக்குநூறாக உடைத்தெறிந்த ரஷ்யா

STUDENTS RETURN HOME BY AIR INDIA FLIGHT FROM ROMANIA, UKRAINE RUSSIA WAR, மாணவர்கள், ஏர் இந்தியா விமானம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்