'எங்க நாட்டுல' வந்து வாழ விருப்பமா...? அடுத்த வருஷத்துக்குள்ள '4,11,000' பேருக்கு 'சிட்டிசன்ஷிப்' கொடுக்க போறோம்...! - 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்ட நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வரும் 2022-ஆம் ஆண்டில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக உலகின் ஏனைய நாடுகளை ஒப்பிடுக்கையில் கனடாவில் தான் மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வந்துள்ளனர். எந்த நாட்டில் எந்த அசம்பாவிதம் நடந்து மக்களை அகதிகளாக வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு ஓர் வாசலை எப்போதும் திறந்து வைத்திருக்கும். இந்நிலையில் வரும் ஆண்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கனடா அரசின் இந்த அறிவிப்புக்கு அங்கு நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறை கூட முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு, கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரும், பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்களும் கூடி புதிய அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன் இருந்த ஒத்திகை திட்டமான Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் நிரந்தரமாக்கப்பட்டு, அந்த திட்டம் அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என பெயரிடப்பட்டுள்ளது.

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, பிற மாகாண மற்றும் பெடரல் தலைவர்கள் ஆகியோர் கூடி, 2022 ஜனவரி 1 முதல், Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் நிரந்தரமாக்கப்படுவதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் கனடாவின் அட்லாண்டிக் கனடா பகுதியில் ஏராளமான பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் அங்கு புதிதாக சில பணியாளர்களே வருகின்றனர். இந்த நிலைமை தான் கனடா முழுவதும் இருக்கிறது என்றாலும், Newfoundland and Labrador, Prince Edward Island, New Brunswick, மற்றும் Nova Scotia ஆகிய நான்கு கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் அதிகளவில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் இப்பகுதியில் புலம்பெயர்தல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புலம்பெயர்வோரை தக்கவைக்க அட்லாண்டிக் கனடா தடுமாறியே வந்தது. ஆனால், Atlantic Immigration Pilot (AIP) என்னும் திட்டம் தொழிலாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளதற்கான அறிகுறிகள் தெரிவதாக கனடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது..

எனவே, கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser இந்த Atlantic Immigration Pilot திட்டம் நிரந்தரமாக்கப்பட இருப்பதுடன், அது இனி அட்லாண்டிக் புலம்பெயர்தல் திட்டம் (Atlantic Immigration Program) என அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

CITIZENSHIP, CANADIAN, குடியுரிமை, கனடா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்