'இரவு பாட்டு கேட்டுட்டே தூக்கம்'... 'காலை எழுந்ததும் நெஞ்சுக்குள்ள ஒரே வலி'... 'உடனே காதை தொட்டபோது காணாத 'ஏர்பட்ஸ்'... எக்ஸ்ரேயில் தெரிய வந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போதைய சூழலில் யாரைப் பார்த்தாலும் காதில் ஹெட்போன் அல்லது ஏர்பட்ஸ் உடன் தான் பார்க்க முடிகிறது. மொபைல் போன் எப்படி அவசியமான ஒன்றாக மாறிவிட்டதோ, அதே போன்று இந்த இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அந்த ஏர்பட்ஸே ஒருவருக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள சம்பவம் தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்து வருபவர் பிராட் கவுதியர். 38 வயதான இவருக்குப் பாட்டுக் கேட்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அந்த வகையில் காதில் எப்போதும் ஏர்பட்ஸோடு பிராட் காணப்படுவார். இந்நிலையில் இரவு தூங்கும் போது பாட்டுக் கேட்டுக்கொண்ட பிராட் துங்கியுள்ளார். பின்னர் காலை எழுந்ததும் தனது காலைக் கடன்களைச் செய்வதற்குத் தயாரான அவர், தண்ணீர் குடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. ஒருவிதமான சிரமம் அவருக்கு ஏற்பட்டது. அதோடு மார்பு பகுதியில் கடுமையான வலியும் ஏற்பட்டது. இப்படி ஒரு நாளும் இருந்தது கிடையாதே என எண்ணிய பிராட், தனது காதில் இருக்கும் ஏர்பட்ஸை எடுக்கக் காதை தொட்டுள்ளார். அப்போது அவரது காதில் ஏர்பட்ஸ் இல்லை. இதனால் அதிர்ந்துபோன பிராட்க்கு அப்போது தான் முழு விஷயமும் புரிந்துள்ளது.

இதையடுத்து பிராட்டை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு மருத்துவர்கள் பிரட்டைப் பரிசோதனை செய்த நிலையில்,  அவர்களிடம் தான் தூங்கி எழும்புகையில் தன்னுடைய ஏர்பட்ஸ்களில் ஒன்றைக் காணவில்லை என்றும் அதை, தான் விழுங்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் பிராட் கவுதியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து எக்ஸ்ரே செய்து பார்க்கையில் உணவுக்குழாயில் ஏர்பட் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ‘எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் பிராட் கவுதியரின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த ஏர்பட்டை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின்னர் தான் பிராட் நிம்மதி பெருமூச்சு விட்டார். தற்போது நலமாகி வீட்டிற்கு வந்து விட்டதாக பிராட் கவுதியர் தெரிவித்துள்ள நிலையில், தூங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள் என உருக்கத்துடன் பிராட் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்