37 வயது வித்தியாசம்.. காதலித்து திருமணம் செய்த ஜோடி.. குழந்தை பெற்று கொள்ள போவதாக அறிவித்ததால் வைரலாகும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தை சுற்றி நாம் வலம் வரும் சமயத்தில் நம்மை சுற்றி நடைபெறும் ஏராளமான விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "லவ் டுடே படத்துல வர்ற மாதிரி.. பிளாக்மெயில் நடந்தா"... இதை செய்யணும்.. மேடையை அதிர வைத்த செளமியா அன்புமணி!!

அதிலும் குறிப்பாக இயல்பாக நடைபெறும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் சமயத்தில், அவை இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக கூட மாறும். அந்த வகையில் தான் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த குரான் மெக்கெய்ன் மற்றும் செரில் மெக்ரிகோர் என்ற தம்பதியினர் குறித்த செய்தியும் கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

37 வயது வித்தியாசம்

இதற்கு காரணம் இருவருக்கும் இடையே சுமார் 37 வயதும் வித்தியாசம் உள்ளது தான். குரான் மெக்கெய்ன் என்ற இளைஞருக்கு 25 வயதாகிறது. அவரது மனைவியாக இருக்கும் செரில் மெக்ரிகோர் என்பவருக்கு 62 வயதாகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே 37 வயது வித்தியாசம் இருந்த போதும் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல், இத்தனை பெரிய வயது இடைவெளியில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட விஷயம் அந்த சமயத்தில் பரபரப்பாகவும் இணையவாசிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. அவர்களைப் பற்றிய பதிவுகள் எப்போது இணையத்தில் வெளியானாலும் அவை பெரிய அளவில் விமர்சனத்தை சந்திப்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் ஒன்றாக காணும் பலரும் செரில் குரானின் பாட்டி என்றும் நினைக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

வயது பார்க்காமல் மலர்ந்த காதல்

முன்னதாக குரான் மற்றும் செரில் ஆகியோர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முதலாக சந்தித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர்கள் பார்க்கவே இல்லை என்ற சூழலில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு கன்வீனியன் ஸ்டோரில் பார்த்த போது பேச ஆரம்பித்துள்ளனர். அதன் பின் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

குழந்தை வேணும்..

இதனிடையே, தற்போது மீண்டும் குரான் மற்றும் செரில் தம்பதியினர் குறித்து செய்தி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. திருமணமான பிறகு, செரில் மற்றும் குரான் ஆகியோர் குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் செரில் வயது காரணமாக அது பெரிய பிரச்சனையை விளைவிக்கும் என்றும் ஏராளமானோர் குறிப்பிட்டு வந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளது தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதன்படி வாடகை தாயை அவர்கள் கண்டுபிடித்ததாகவும், 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பெறப் போவதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

குரானுக்கு இது முதல் குழந்தையாக இருந்தாலும் செரிலுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். அது மட்டுமின்றி 17 வயதில் ஒரு பேரக் குழந்தை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | லாட்டரி ஜெயிக்க போறதா கனவு கண்ட மனுஷன்.. இரண்டே வாரத்தில் தாறுமாறாக அடித்த அதிர்ஷ்டம்!!

COUPLES, HUSBAND, WIFE, LOVE MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்