'கொரோனா' வைரசால் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும்... ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த 'பில்கேட்ஸ்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசால் முதல் ஆறு மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஓராண்டுக்கு முன்பே கணித்து ஒரு கூட்டத்தில் பேசியது தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு கூட்டத்தில் பேசியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மாசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த உலகம் முழுவதும் விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் பாதிக்கப்பட உள்ளது என்றும், இந்த வைரசால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அந்த வைரசால் உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது என எச்சரித்துள்ள அவர், அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

BILL GATES, PREDICTION, CORONA VIRUS, 3.30 CRORE DIE, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்