33 வயசுல 70 நாடுகள் சுற்றிய பெண்.. "போற ஊருல எல்லாம் Stay-க்கு Free.." வியப்பை ஏற்படுத்தும் ஐடியா.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

33 வயதே ஆகும் பெண்மணி ஒருவர், மொத்தம் 70 நாடுகளை சுற்றி வந்துள்ள நிலையில், இதற்காக பெரிய அளவில் பணம் செலவு செய்யாமல், மிகவும் சிக்கனமாக பயணங்கள் மேற்கொண்ட விதம் தான், பலரையும் வியப்பில் ஆழ்ந்து போக செய்துள்ளது.

Advertising
>
Advertising

Sibu De Benedictis என்ற 33 வயதாகும் பெண்மணி, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழக்கம் உடையவர். அதே போல, பல நாடுகளில் இவர் தங்கும் போது இலவசமாகவே அங்கு தங்கி உள்ளது தான், எப்படி என்ற கேள்வியை பலரது மத்தியிலும் உருவாக்கி உள்ளது. இதற்கான பதிலை Sibu தற்போது தெரிவித்துள்ளார்.

இலவசமா Home Stay..

தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், இப்படி ஒவ்வொரு நாடாக நாடோடி போன்று சுற்ற வேண்டும் என்ற ஆசை Sibu-வுக்கு உருவாகி உள்ளது. அதே போல, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கே இலவசமாக தங்குவதையும் Sibu வழக்கமாக கொண்டுள்ளார். இது எப்படி என்றால், ஏதாவது ஒரு நாட்டில் சொந்த வீடு வைத்திருக்கும் நபர், வேறு ஒரு நாட்டில் வேலைக்கு செல்லும் போது, அந்த வீடு காலியாக இருக்கும்.

Sibu செல்லும் நாட்டில் இப்படி காலியான வீடுகள் இருந்தால், அதனை தொடர்பு கொண்டு இலவசமாகவே அவர் தங்கிக் கொள்வார். Trusted House-sitters என்ற தளத்தில் Sibu மெம்பராக இருப்பதால், இப்படி காலியாக இருக்கும் வீடுகளைத் தொடர்பு கொண்டு, அங்கே இலவசமாக தங்கிக் கொள்ளலாம். பதிலுக்கு, அந்த வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், தோட்ட வேலைகள் பராமரிப்பதும் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.

கையில ஒரே ஒரு சூட்கேஸ்..

அதே போல, ஒவ்வொரு நாட்டிலும் பணத்தை மிக சிக்கனமாக தான் இவர் செலவு செய்கிறார். பெரிய கடைகளில் சென்று, ஆடம்பரமாக செலவு செய்யாமல், அங்கே கிடைக்கும் அதே பொருளை சிறிய கடையில் தகுந்த பட்ஜெட்டில் வாங்கிக் கொள்கிறார். அதே போல, தன்னிடம் இருக்கும் டாலர்களளுக்கு எந்த நாடுகளில் அதிக மதிப்பு இருக்கிறதோ, அதற்கேற்ற வகையில் அதனை புத்திசாலித்தனமாக Sibu பயன்படுத்திக் கொள்வாராம்.

மேலும், போகும் நாடுகளில் எல்லாம், உணவகங்கள் மற்றும் பார் உள்ளிட்டவற்றில் Waiter-ஆக வேலைகள் செய்து பணத்தை சேமித்து வைக்கிறார். அதே போல, இவர் பயணம் செய்யும் போது ஒரு சூட்கேஸ் மட்டும் தான் கொண்டு செல்கிறார். கிட்டத்தட்ட 7 ஜோடி உடை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் மட்டுமே அவர் சூட்கேஸில் உள்ளது.

தான் பயணம் செய்த இடங்கள் மற்றும் சிக்கனமாக எப்படி பணத்தினை செலவு செய்ய வேண்டும் என்பது பற்றி, மற்ற பலருக்கு பயன்படும் வகையில், புத்தகம் ஒன்றையும் Sibu எழுதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நாடு நாடாக Sibu De Benedictis மேற்கொள்ளும் பயணம், இது போன்று பயணத்தின் மீது ஈர்ப்புள்ள பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

SIBU DE BENEDICTIS, GLOBE TROTTER, 70 COUNTRIES

மற்ற செய்திகள்