அமெரிக்காவில் தூய எஃகினால் வடிமைக்கப்பட்ட, 33 ஆண்டுகள் பழமையான முயல் சிலை 640 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க கலைஞரான ஜெஃப் கூன்ஸ் (Jeff Koons) என்பவர், 1986ம் ஆண்டு வடிவமைத்த இந்த முயல் சிலை, 104 செண்டி மீட்டர் உயரம் கொண்டதாகும். முகமின்றி கையில் கேரட்டை பிடித்தவாறு நிற்கும் இந்த முயல் சிலை தான் தற்போது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. 91.1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்க்கு இந்த முயல் சிலை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரிட்டிஷ் ஓவியர் டேவிட் ஹாக்னீயின் (David Hockney) ஓவியம், 634 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை ஜெஃப் கூன்ஸின் முயல் சிலை முறியடித்துள்ளது.
இந்நிலையில், ஏலம் எடுத்தவரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், வாழும் கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பு இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரிய சாதனை என கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கோபப்படாதீங்கம்மானு சொன்ன முதியவரை பஸ்சிலிருந்து தள்ளிவிட்ட பெண்”!.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- “அட எதுல விளையாடனும் ஒரு வரமுர இல்லையா”?.. இந்த குழந்தையை அடகு வைத்தா எவ்வளவு பணம் கொடுப்பீங்க! தந்தையின் செயலால் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!
- “வீட்ல யாராது இருக்கீங்களா”?... நான்தான் முதல வந்துருக்கேன்! வைரலாகும் வீடியோ!
- “கோலாகலமாக நடந்த விழா”!... உயரிய விருது பெற்ற பிரபல கோல்ஃப் வீரர்!
- ‘இதுதான் உண்மையான சாதனை’.. உழைப்பால் உயர்ந்த அம்மாவும் மகளும்.. வைரல் புகைப்படம்!