மது பிரியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பெரிய ஆப்பு... அதிர வைத்த தாலிபான்களின் ஒற்றைச் செயல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை ஆப்கான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மொத்தமாக காபூல் கால்வாயில் கவிழ்க்கப்பட்டன.

Advertising
>
Advertising

ஆப்கானிஸ்தானில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவதும் அதைத் தயாரிப்பதும் குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மறைத்து வைக்கப்பட்ட மதுபானங்களை அந்நாட்டு தாலிபான் அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். சுமார் 3 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பேரல், பேரல் ஆகப் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள், பேரல்கள் என அனைத்தையும் தாலிபான் அதிகாரிகள் அந்நாட்டில் ஓடக்கூடிய காபூல் கால்வாயில் கவிழ்த்தனர். இதுகுறித்த தகவலை ஆப்கானிஸ்ஹான் இன்டெலிஜென்ஸ் இயக்குநரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த அதிரடி பறிமுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இஸ்லாமியர்கள் மது தயாரிப்பதும் விற்பதும் குற்றம்” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடையதாக 3 பேரையும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் அதிகாரிகள் கைது செய்யுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர்.

அது முதல் ஆப்கான் முழுவதும் இதுபோன்ற ரெய்டுகள் அடிக்கடி நடக்கின்றன. மது, போதைப் பொருட்கள் ஆகிவற்றுக்கு எதிரான ரெய்டுகள் அந்நாட்டில் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் அறம் பறைசாற்றும் அமைச்சகம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் அறம் சார்ந்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தாலிபான் அரசு நடைமுறைப்படுத்தும் சட்ட விதிகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ATTACKED, ஆப்கான், தாலிபான்கள், 3 ஆயிரம் லிட்டர் சாராயம், TALIBANS, AFGHANISTAN, 3THOUSAND LITRES OF ALCOHOL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்