65 மணிநேரம் போராட்டம்.. ‘நிலநடுக்க’ இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 வயது குழந்தை.. நெஞ்சை ‘பதற’ வைத்த நொடிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 வயது குழந்தை 3 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஏகன் கடலில் ஏற்பட பயங்கர நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏகன் கடலில் 16.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக துருக்கி அரசு தெரிவித்தது.

கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவில் இருந்து வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், இது 6.9 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் எனவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு அளவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மலமலவென சரிந்து விழுந்தன. இதில் 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து சேதடைந்துள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். .நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 வயது பெண் குழந்தையை 3 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்டுள்ளனர். சுமார் 65 மணி நேர போராட்டத்துக்கு பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டபோது பயத்தில் இருந்த குழந்தை அதிகாரி ஒருவரின் விரலை இறுக பிடித்திருந்த காட்சி காண்போர் மனதை கனக்கச் செய்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்