“தாலிபான்களோட 'கொடிய' கழட்டி வீசுங்க...! இந்த மண்ணுல 'அவங்க கொடி' பறக்க கூடாது...!” 'திடீரென அங்கு வந்த தாலிபான்கள்...' அடுத்து நடந்த பதறவைக்கும் வைக்கும் பயங்கர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தாலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் கட்டிப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் காபூலுக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத்தில் ஏற்றப்பட்ட தாலிபான்களின் கொடியினை அகற்றிவிட்டு ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை அப்பகுதி மக்கள் ஏற்றியுள்ளனர். இந்த மண்ணில் தாலிபான்களின் கொடி பறக்கக் கூடாது என அவர்களின் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து அங்கு வந்த தாலிபான்களுக்கும் போராட்டம் நடத்திய மக்களுக்கும் இடையே கடுமையான சண்டை உருவானது இதில் மூன்று பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதாகவும், தாலிபான்கள் பொதுமக்களை விமான நிலையத்தை அடைய விடாமல் தடுத்து விரட்டியடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கலங்குகின்றனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கான உரிமை பரிக்கப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்