26 வயசுல மினிஸ்டர் பதவி.. உலகமே இவங்கள பத்திதான் பேசிட்டு இருக்கு.. யாருப்பா இவங்க..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவீடன் நாட்டில் 26 வயதே ஆன இளம்பெண் ஒருவர் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம், அந்நாட்டில் மிக இளம் வயதில் அமைச்சராகும் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | Tea போடுறதுல கின்னஸ் ரெக்கார்டா..? அதிர்ந்து போன அதிகாரிகள்.. அப்படி என்னப்பா செஞ்சாங்க.?

சுவீடன் நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாட்டின் பிரதமராக உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersson)-ஐ தேர்ந்தெடுத்துள்ளனர். இதனையடுத்து கேபினெட் குழுவை தெர்ந்தெடுக்கும் பொறுப்பினை மேற்கொண்டுவந்த Ulf Kristersson, அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், 26 வயதே ஆன ரோமினா பூர்மோக்தாரி (Romina Pourmokhtari) யின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ரோமினா, அந்நாட்டின் காலநிலை மாற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் புறநகரில் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் ரோமினா. இவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மரபு உரிமையாக பெற அந்நாட்டு சட்டம் ஆதரவு அளித்தது. 26 வயதான ரோமினா பூர்மோக்தாரி லிபரல் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்தவர். கடந்த காலத்தில் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியுடன் தனது கட்சியை இணைக்கும் கிறிஸ்டெர்சனின் நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சித்தவர் ரோமினா. சுவீடனை பொறுத்தவரையில் முன்னதாக 27 வயதில் ஒருவர் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார் ரோமினா.

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடிவரும் கிரேட்டா துன்பெர்க்கின் தாயகம் சுவீடன் ஆகும். அதே நாட்டில் ரோமினா தற்போது காலநிலை மாற்ற அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் துன்பெர்க்கின் கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வாரா? என நெட்டிசன்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

சுவீடனில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு இதர கட்சிகள் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் உல்ஃப் கிறிஸ்டர்சன், அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கேபினெட் உருவாக்கத்தின் போது, புதிதாக சிவில் பாதுகாப்பு எனும் துறையையும் உல்ஃப் கிறிஸ்டர்சன் உருவாக்கியிருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உல்ஃப் கிறிஸ்டர்சன் தெரிவித்திருக்கிறார்.

Also Read | Bigg Boss 6 Tamil : "எதே மறுபடியுமா?".. அமுதவாணன் சொல்லிய விஷயம்.. அரண்ட GP முத்து..

ROMINA POURMOKHTARI, SWEDEN CLIMATE MINISTER

மற்ற செய்திகள்